பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா (பாரியும் கபிலரும் நடந்துகொண்டே பேசுகின்றனர்) கபிலர்: பறம்புமலைக் காவலரே! பாரி வள்ளலே! ஏதோ என்னைக் கேட்க வேண்டும் என்றீரே!... நாம் இப்பொழுது இருப்பது பறம்பு மலை உச்சியிலே...தனிமையிலே... பாரி. ஆமாம் கபிலரே... மனதிலே குழப்பம். கபிலர்: குழப்பமா... பாரி: ஆமாம்... மலையைச் சுற்றி மேகங்கள் சூழ்ந்திருப்பது போல, என் நாட்டைச் சுற்றிப் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பது போன்ற ஒரு பிரமை. அந்த நினைவைத் தொடர்ந்து நிலை மாறும் பலவகையான எண்ணங்கள். ஆனால், அது பயத்தினால் அல்ல. கபிலர்: எப்பொழுதும் போல... பாரி: எனக்கேற்படும் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளத்தான் போகிறேன். கபிலர்: தாராளமாகக் கேளுங்கள்... பொருளை வாரி வாரித் தரும் தங்களிடம், தமிழால் தினம் தினம் பரிசு பெறும் புலவன் நான். உங்கள் நண்பன் நான். பாரி: உண்மைதான். கபிலரே!...மிக அருமையானது நமது மனித பிறவி..அப்பிறவியை எடுத்த நாம் அடுத்து செய்யவேண்டியது என்ன? கபிலர்: ம்...தன்னைப் போல் பிறரையும் நேசிக்க வேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/33&oldid=775420" இலிருந்து மீள்விக்கப்பட்டது