பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் பாரி: கபிலர்: பாரி: கபிலர்: கபிலர்: பாரி: கபிலர்: பாரி: கபிலர்: பாரி: கபிலர்: பாரி: 33 நேசிக்கும் பண்பு எப்பொழுது வரும்? - நிதானமாக சிந்தித்து; மனதைப் பக்குவப் படுத்திக் கொள்ளும்போதுதான் வரும். மனப்பக்குவம். அது எப்படி வரும்? பக்குவம் என்பது எதையும் தாங்கும் இதயத்தைப் பெறும்போது. - எதையும் தாங்கும் இதயம் வரவேண்டுமானால்? இன்றிருப்பார் நாளைக் கில்லை. நாளைக்கு நாமும் இல்லை... ஆகவே, வாழும் வரை பிறருக்கு உதவியாக வாழ்வோம்' என்று நினைக்கும்போது. உதவியாக வாழ்வது என்றால்... உதவி என்பது உள்ளத்தின் மலர்ச்சி. அன்பு என்பது..? அனுதாபத்தின் முதிர்ச்சி. அறிவு என்பது.? ஆராய்ச்சியின் வளர்ச்சி. - ஆராய்ச்சியை வளர்ப்பது? கற்று அடங்கிய உள்ளம். உள்ளம் என்பது..? பண்பை வளர்க்கும் நிலம். எது பண்பான உள்ளம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/34&oldid=775421" இலிருந்து மீள்விக்கப்பட்டது