பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - சேரன்: பாரி: டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புகழும், இன்பமும் பசு போல் இருந்தால் வராது. புலிபோல் பாய்ந்தால் தான் கிடைக்கும். பறம்புமலையா குறும்புத் தலையா! முற்றுகை இடப்போகிறோம். முற்றிவிட்ட பகை வெடிக்கும், மூண்டெழுந்த படை கண்டு அவன் மனம் துடிக்கும். நம் வாள் அவன் உயிரைக் குடிக்கும். ஒழிந்தான் பாரி-- - (மூவரும் சிரிக்கின்றனர்) - -திரை காட்சி 3 இடம்: பாரி அரண்மனை. உள்ளே பாரி, கபிலர். சேனாபதி. (கபிலரும் சேனாதிபதியும் நின்று கொண்டிருக்க, பாரி அங்கும் പ് இங்கும் உலவிக் கொண்டிருக்கிறார்) மூளையில் லாத மூவேந்தர்கள் முற்றுகை போட்டிருக்கிறார்கள், மலையைச் சுற்றிய மரமெல்லாம் யானைக்கூட்டம். தெருவெங்கும் தேரோட்டம். நம்மைப் பிடிக்கும் நப்பாசையில் திரிகிறார்கள். என்னை வெல்வது எளிதென்று எண்ணி முயல்கிறார்கள். பாவம்! பொறாமை அவர்களை பாடாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/39&oldid=775426" இலிருந்து மீள்விக்கப்பட்டது