பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை நல்ல நாடகங்கள் என்று இந்த நூலுக்குப் பெயர் நட்டியிருக்கிறேன். நாடகம் என்பது நல்ல கருத்துக்களை நெஞ்சிலே ஏற்றி, நிலை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிற அற்புதமான கலை நயத்தோடு கூடிய அரிய முயற்சியாகும். - படிப்பதற்கேற்ற நாடகம்; நடிப்பதற்கேற்ற நாடகம் என இரண்டு வகையான நாடக நூல்கள் உண்டு. படிக்கும் போது சுவையாகவும், நடிக்கும் போது சுகமாகவும் அமையக் கூடிய நாடகங்களே, ஜனரஞ்சகமாக அமையும் என்பார்கள். சென்னை மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் என்ற பள்ளியிலே, நான் பணியாற்றிய போது, பள்ளி விழாக்களுக்காக எழுதப்பட்ட நாடகங்கள். ஆங்கிலப் பள்ளியிலே, ஆங்கிலத்தில் தான் மாணவர்கள் பேசவேண்டும் என்ற சூழ்நிலையில், படித்த மாணவர்கள் எல்லோரும், நல்ல தமிழ் பேசிப்பழக வேண்டும் என்பதற்காக நல்ல தூய தமிழிலே எழுதப்பட்ட நாடகங்கள் தான் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. கற்றுக் கொண்ட மாணவர்கள், நன்றாக நடித்தார்கள் என்பது மட்டுமல்ல; இலக்கிய நயம் நிறைந்த வசனங்களை யெல்லாம் தெள்ளத் தெளிவாகப் பேசி சிறப்பாக நடித்தார்கள் என்பதுதான், நல்ல நாடகங்களின் சிறப்பாக அமைந்திருந்தது. இவ்வாறு, அரங்கேறிய நாடகங்கள், பிறகு சென்னை வானொலியிலும், சென்னைத் தொலைக்காட்சியிலும் நடிக்கப்பட்டு, மாணவ மாணவரிடையே பிரபலமாகின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/5&oldid=775438" இலிருந்து மீள்விக்கப்பட்டது