பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா → (இளவரசன் கோபமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறான். தளபதி அங்கு வந்து வணக்கம் செய்கிறான்) - தளபதி: அடியேனின் வணக்கம் இளவரசே! அழைத்ததாகத் தகவல் வந்தது. * இளவ. ஆமாம் தளபதி. நான் தான் உன்னை அழைத்தேன். ஏன் தெரியுமா?... ஆணவக் காரர்களை இங்கிருந்து விரட்ட, தானென்று தருக்கித் திரியும் தறுதலைகளின் தலைகளை உருட்ட, வெட்டு என்பதற்கு முன்னே கட்டுகின்ற வீரர்களைத் திரட்ட. - தளபதி காரியம் புரிகிறது. அதற்கான காரணத்தை நான் அறியலாமா இளவரசே!. ‘. இளவ: காரணமா?...உனக்குத் தெரியாமலா?...போர் தொடுக்கப் போகிறேன்...போர்...உரிமைப்போர்! உரிமையை மறந்தவரை-உணர்ச்சியற்று, உண்மை மறந்து, வீண் பெருமை பேசி, விவேகம் துறந்தவரை, இந்த ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு, இளமை பவனிவர, வீரம் அவனிபெற, நான் முடி சூட்டி இந்த நாட்டை ஆளும் நல்லதொரு காலம் வர...வீரப் போர் தொடுக்கப் போகிறேன்...அதுவும். விவேகப் போர். - தளபதி: போரா?...யாருடன்?... இளவ: யாருடனா?...என்னைப் பெற்றவருடன்.இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/51&oldid=775440" இலிருந்து மீள்விக்கப்பட்டது