பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 77 காங்: என்ன அமைச்சரே!... (திரும்பி வந்து) அமைச்: தந்தையைப் போகவிடுங்கள். அவருக்குத் தேவை, இப்பொழுது தனிமை. காங்: காரணம்... அமைச்: இருக்கிறது. ஆனால்! - - - காங்: தயக்கமென் ன அமைச்சரே! தாராளமாய் கூறலாம்! சேனாதி: சொன்னால் ...அந்தச் சேதி உங்களைப் பாதிக்கும். காங் புண்ணை மூடி வைத்தால் புரையோடிப் போகுமே தவிர, ஆறிப் போகாது. தீர்க்க வேண்டிய பிரச்சனையைத் தீர்க்க முயல்வதுதான் வீரம். பயந்து ஒடுவது கோழைத்தனம். அமைச் அறிந்தபின் ஆத்திரப்படுவீர்கள். னேறி வருத்தப்படுவதற்கும் வாய்ப்புண்டு. கங்: எப்படி இருந்தால் என்ன! என்றாவது ஒரு நாள் - தெரியத்தான் போகிறது. முன்னால் நீங்கள் கூறிவிட்டால், பின்னால் நிகழ்வதை என்னால் நிச்சயம் தடுக்க முடியும். சேனாதி: ஆனால்... ஒரு வேண்டுகோள் அமைக் எக்காரணத்தை முன்னிட்டும் தங்கள் தந்தையிடம், நாங்கள் கூறியதாகக் கூறக் Bun. LTTER].

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/78&oldid=775479" இலிருந்து மீள்விக்கப்பட்டது