பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 93 வந்து விட்டேன் போலிருக்கிறதே... இல்லையா?... - தருமன்: அப்படி ஒன்றும் இல்லை. கண்ணன்:பேசுகின்ற வாய், வார்த்தையை மறைத்தாலும், பிரகாசிக்கும் முகம் அழகாகக் காட்டி விடுமே... என்ன நேர்ந்தது? ஏன் இப்படிக் குழப்பத்துடன் காணப் படுகின்றீர்கள்? என்ன காரணம்? நகுலன்: எல்லாம் வல்ல உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ? கண்ணன்:சொன்னால்தானே புரியும்...அதுதானே முறை! பீமன்: முறையைச் சொல்லட்டுமா? எங்கள் குறையைச் சொல் லட் டுமா? 13 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த எங்களை, வாவென்று வரவேற்கவோ, இந்தா என்று நாட்டைக் கொடுக்கவோ யாருமேயில்லை. அதற்குப் பதில்--ஏதேதோ பேசுகிறான், ஏசுகிறான் துரியோதனன். என்ன திமிர் இருந்தால்? அருச்சு: அந்தத் திமிரை நான் அடக்குகிறேன். நெஞ்சாரப் பொய் சொல்லி, வஞ்சகமாய் ஏமாற்றி, எங்கள் உரிமையைப் பறித்த, பெருமையை அழித்த அந்தக் கெளரவப் பதர்களின் திமிரை நான் அடக்குகிறேன்! கண்ணன் அடக்கம் பேச்சில் இருக்க வேண்டும். வீரம் செயலில் இருக்கவேண்டும். இல்லையா சகாதேவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/94&oldid=775516" இலிருந்து மீள்விக்கப்பட்டது