பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 97 பஞ்சாலிதுதா...முன்பு அனுப்பித் தோற்றது போதாதா? முனிவர் பட்ட அவமானம் தீராதா? அன்று விரித்த என் கூந்தலை, என்று முடிப்பேன்? அண்ணா..இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறா?... கண்ணன்:கவலைப் படாதேயம்மா...துதுபோய் மீண்டு வந்து நல்லாய் ! உன் கூந்தலை நானே முடிக்கிறேன். தருமன்: போய், வெற்றியோடு வாருங்கள். அருச்சு (கேலியாக) கண்ணா! நீங்கள் போவது சரணாகதித் தூதா, இல்லை சமாதானத் தூதா?... பீமன்: கொசுவை நசுக்கக் குறுந்தடியா?...கோழைகளை வீரர் என எண்ணித் தூது செல்வது... தருமன்: நமக்குப் பெருமையைத் தரும்... அறம் காத்ததற்காக... கண்ணன்.ஆமாம் பீமா மூத்தோர் சொல் என்றும் தேவவாக்கு. போய் வருகிறேன். (கண்ணன் போக, அவரையே எல்லோரும் பார்க்கின்றனர்) -திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/98&oldid=775525" இலிருந்து மீள்விக்கப்பட்டது