பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா காட்சி 3 இடம்: துரியோதனன் சபை. உள்ளே துரியோதனன், கண்ணன், கர்ணன், சகுனி, மற்றும் அவையோர். (சபையினர் அமர்ந்திருக்கின்றர். கண்ணன் உள்ளே நுழைகிறான். துரியோதனன் இருகை நீட்டி எதிர் சென்று அழைக்கச் செல்ல, சகுனி தடுத்து அமர்கிறான். துரியோதனன் ஆசனத்தில் இருந்தவாறே) துரியோ கண்ணா வருக! கார்மேக வண்ணா வருக! (கேலியுடன்) (கண்ணன் ஆசிர்வாதம் செய்வது போல் கையசைத்துத் தன் இருக்கையில் அமர்கிறான். துரியோதனன் சகுனியைப் பார்க்க, சகுனி கோபமாகத் துரியோத னனைப் பார்க்க, துரியோ தனனுக்குக் கோபம் வந்து விடுகிறது) துரியோ: கண்ணா...வந்த காரியம்? கண்ணன்:நேரடியான கேள்வி, நேர்மையான கேள்வி... தூது வந்தேன். சகுனி, கர்ணன் (இருவரும்) என்ன? கண்ணன்.ஆமாம்.--சூதாடித் தோற்று, ஆதரவிழந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/99&oldid=775527" இலிருந்து மீள்விக்கப்பட்டது