இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சூரியன்
காலையில் சூரியன் கண்விழிப்பான் கடமைகள் செய்திட முன்நடப்பான் வேலையை மனிதர்கள் செய்திடவே விரும்பியே தினந்தினம் துணையிருப்பான்!
சேவல் கூவியே சிறகடிக்கும்
சேர்ந்தே குயிலும் குரல்கொடுக்கும
ஆவலில் மலர்கள் இதழ்விரிக்கும்
அழகாய் சிரித்தே தேன்இறைக்கும் !
வெளிச்சம் உலகில் பரவிவரும்
வேலைகள் வீட்டில் தொடங்கிவிடும் பளிச்சென பகலும் வந்துவிடும்
பற்பல நன்மைகள் தந்துவிடும் !
சூரியன் உதிப்பது அதிகாலை
சூட்டை கொடுப்பது பகல்வேளை
சுகத்தைக் கொடுக்கும் மாலையிலே
சென்றே மகிழ்வோம் சோலையிலே !
19