பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கள் வீட்டு நாய் குட்டி



அங்கும் இங்கும் ஓடி
ஆட்டம் போடும் சுட்டி !
எங்கள் வீட்டு நாய்க்கு
இட்ட பெயர் குட்டி !


வாலை ஆட்டி வந்து
வாயில் வாங்கும் ரொட்டி !
காலைத் தூக்கி நின்று
கவ்வி ஒடும் எட்டி !


காலின் அருகில் குந்தி
காவல் காக்கும் குட்டி !
ஆளைக் கண்டு விட்டால்
அதட்டு வதில் கெட்டி !

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/29&oldid=1341977" இலிருந்து மீள்விக்கப்பட்டது