பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கள் லட்சியம்



இன்று சின்னக் குழந்தைகள்
எங்கள் அழகைப் பாருங்கள்!
நன்கு வளர்ந்து வருகிறாேம்
நாளை பெரிய மனிதர்கள் !


நிலத்தைப் போல வளமையாய்
நிதமும் உடலை வளர்த்துவோம் !
நீரைப் போல் எளிமையாய்
நிதமும் பிறர்க்கு உதவுவோம் !


நெருப்பைப் போல வலிமையாய்
நேர்த்தியாக உதவுவோம் !
சிறப்புமிக்கக் காற்று போல்
தினமும் உழைத்து மகிழுவோம் !


உழைப்பை என்றும் பாேற்றுவோம் !
உண்மை தீபம் ஏற்றுவோம் !
மழையைப் போல வாழவே
மனதில் கொண்டு வளா்கிறாேம் !

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/32&oldid=1341980" இலிருந்து மீள்விக்கப்பட்டது