பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

நல்ல பிள்ளையார்

பாவம்! அவளுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. அவளுடைய அம்மா சில மாதங்களுக்கு முன் இறந்து போனாள். ஆகையால் அங்கே போனால் அப்பா கோபித்துக்கொண்டு, மறுபடியும் மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். பிள்ளையார் விட்ட வழி விடட்டும் என்று அவள் கால்போன வழியே நடந்து சென்றாள்.

ஊருக்கு வெளியே ஒரு காடு இருந்தது அதற்குள் புகுந்து நடந்தாள். மாலை வந்துவிட்டது. இரவு நேரத்தை எங்காவது கழித்து விட்டுப் பிறகு எங்காவது போகலாம் என்று எண்ணினாள்.

காட்டில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. மெதுவாக அதில் ஏறி ஒரு கிளையில் அமர்ந்து சாய்ந்து கொண்டாள். அவள் மடியில் பிள்ளையார் இருந்தார். நெடுநேரம் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

நள்ளிரவு ஆயிற்று. அப்போது சில திருடர்கள் எங்கேயோ திருடிவிட்டு, அந்த ஆலமரத்தடிக்கு வந்தார்கள். தாங்கள் திருடிய பொருள்களைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக அங்கே வந்தார்கள். அந்தப் பொருள்களை அங்கே பரப்பி வைத்துக் கொண்டு பங்கு போட முயன்றார்கள்.

அப்போது கமலாவுக்குச் சிறிதே தூக்க மயக்கம் உண்டாயிற்று. அவள் பிடித்திருந்த பிள்ளையார் கையிலிருந்து நழுவினார். அவர் பொத்தென்று திருடர்