பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

நல்ல பிள்ளையார்

களுக்கு நடுவே விழுந்தார். அவர் விழுந்ததைக் கண்டு திருடர்களுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. யாரோ தங்களைக் கவனிக்கிறார்கள் என்று எண்ணி அவசர அவசரமாகக் கையில் அகப்பட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்கள். அந்த அவசரத்தில் சில நகைகளையும் பணத்தையும் அங்கே விட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

விடிந்ததும் கமலா தன் கையில் பிள்ளையார் இல்லாததைப் பார்த்தாள். கீழே இறங்கி வந்து பார்க்கும்போது பிள்ளையார் நகைகளுக்கும் பணத்துக்கும் நடுவில் இருந்ததைப் பார்த்தாள். அவளுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அந்த நகைகளையும் பணத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டாள். அவற்றைக் கண்டால் தன் மாமியாருடைய கோபம் மாறிவிடும் என்று எண்ணினாள்.

உடனே அங்கிருந்து தன் மாமியார் வீட்டுக்கு வந்தாள். "எங்கேயடி வந்தாய்? நேற்று எங்கே போயிருந்தாய் ?" என்று அவள் கேட்டாள்.

கமலா சிரித்துக் கொண்டாள். "பிள்ளையார் என்னை ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார், அங்கே இந்த நகைகளும் பணமும் கிடைத்தன" என்று சொல்லி மடியிலே கட்டியிருந்த அவற்றை அவிழ்த்துக் கொட்டினாள். மாமியார் அவற்றைக் கண்டு