பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயும் காளையும் 13.

"அப்படியா மிகவும் நல்லதாகப் போயிற்று. எனக்கு வேண்டியது இலையில் மிச்சம் இருக்கும் உணவு. உனக்கு வேண்டியது இலே. நான் இலேயைத் தின்பது இல்லை. நான் உணவைத் தின்று விட்டு இலையை உனக்கு விட்டு விடுகிறேன். இதனுல் இரண்டு பேருடைய விருப்பமும் நிறை வேறும்’ என்று நாய் சொல்லியது. காளேக்கன்று அந்த ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தது.

அடுத்த நாள் முதல், நாய் எச்சில் இலேயில் மிஞ்சியிருக்கும் உணவுப் பண்டங்களேயெல்லாம் தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டது. காளைக்கன்று இலைகளே உண்டு திருப்தி அடைந்தது. ஒவ்வொரு நாளும் அந்த இரண்டும் இந்த ஒப்பந்தத்தின் படியே நடந்து வந்தன. .

ஒரு நாள் அங்கே ஒரு புது நாய் வந்தது. எச்சில் இலைகளைக் கண்டவுடன் அவற்றின்மேல் பாய்ந்தது. பழைய நாய் வள் வள்’ என்று குரைத்துக் கொண்டு அதனேடு போரிடத் தொடங்கியது. இது குரைக்க, அது குரைக்க, இது கடிக்க, அது கடிக்க, இப்படி அந்த இடம் ரணகளமாகி விட்டது.

காளைக்கன்று அங்கே வந்தபோது அந்த யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நாள்தோறும் அதுவும் பழைய நாயும் அங்கே வந்து தங்களுக்கு வேண்டி யதைத் தின்ருலும் இரண்டுக்கும் நெருங்கிய நட்பு உண்டாகவில்லை. காளைக்கன்றுக்கு நாயின் பல்லேக்