பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - நல்ல பிள்ளையார்

அரசனுடைய களிறு நின்றபோது கோயில் பிடி அதை அணுகியது. அரசனுடைய களிற்றைத் தடவியது. இரண்டு யானைகளும் துதிக்கைகளைச் சேர்த்து இன்புற்றன. அயலில் இருந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்த்தார்கள். சிலர் இரண்டு யானை களுக்கும் தேங்காய் வாழைப்பழம் தந்தார்கள்.

அரசனுடைய யானே அவற்றைத் தின்றது; பிடி யும்தின்றது. -

அரசனுக்கு நெடுநாளாகக் குழந்தை இல்லை. கிருஷ்ணனே அன்புடன் வேண்டிக்கொண்டால் எல்லாம் கிடைக்கும் என்று ஜனங்கள் சொல்லிக் கொண்டார்கள். அப்படி வேண்டிக்கொண்டு சிலருக்கு விருப்பங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன வாம்.அரசன் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். அவனுடைய மனைவி யாகிய அரசி தனக்குக் குழந்தை பிறந்தால் கிருஷ்ணபகவானுக்கு ஒரு யானை வாங்கி விடுவ தாகப் பிரார்த்தனை செய்து கொண்டாள்.யானைக்குப் பத்தாயிரம் விலை, இருந்தால் என்ன? அவர் களுடைய குலத்தை விளக்க ஒரு குழந்தை பிறந்தால் எவ்வளவு வேண்டுமானலும் கொடுக்கலாமே!

. அரசன் தன்னுடைய யானையும் கோயில் யான யும் நெருங்கி அளவளாவுவதைக் கண்டான். அந்தக் காட்சி அவனுக்கு மகிழ்ச்சியையே உண்டாக்கியது.