பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 9

அரச ஆணையை மீறி நாட்டில் இருக்க முடியாது. ஆகையால் வடுகநாதன் வளநாட்டை விட்டு வெளியேறினான். பகையரசர் சிலர் உதவியைப் பெற்று அவன் வளநாட்டின் மீது படையெடுத்து வந்தான்.

கூடப்பிறந்த இவன் சிறிது கூட அன்பில்லாமல் நடந்து கொண்டு வருகிறானே என்று அரியநாதன் வருந்தினான். படையெடுப்பை எதிர்த்து நிற்க அவன் தன் போர் வீரர்களை ஆயத்தப்படுத்தினான்.

மலை நாட்டிலிருந்து ஒரு வீரன் வந்தான். அவன் அரசன் அரியநாதனைப் பேட்டி கண்டான். படையில் தன்னை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டினான்.

அவன் எப்படிப்பட்ட வீரனென்று அரிய நாதன் சோதித்துப் பார்த்தான். விற் போட்டியிலும் வாள் போட்டியிலும் அந்த மலை நாட்டு வீரன் வெற்றியுற்றான். அதனால் மனம் மகிழ்ந்த அரிய நாதன் அவனைத் தன் படைத் தளபதிகளில் ஒருவனாக அமர்த்தினான். அந்த மலை நாட்டு வீரன் பழகப் பழக இனியவனாக இருந்தான். விரைவில் அவன் அரியநாதனின் அன்புத் தோழனாகி விட்டான்.

மலை நாட்டு வீரனும் அரியநாதனும் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள். அரசாங்க நடவடிக்கைளை இருவரும் கலந்தாலோசித்தே முடிவெடுத்தார்கள். சாப்பிடும் போதும்