பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வீரன் திருமாவலி

தென்பாண்டி நாட்டிலே திருமாவலி என்று ஒரு வீரன் இருந்தான். அவனுடைய வீரச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னர் அவனை அழைத்துத் தன் தானைத் தளபதிகளிலே ஒருவனாக அமர்த்திக் கொண்டார்.

மன்னரின் படைத்தளபதிகளிலே ஒருவனாகி விட்ட திருமாவலி நல்ல உடற்கட்டுடையவன். பயில்வான் போன்ற பலமுடையவன். பாய்ந்து வரும் குதிரையை எதிரில் நின்று கையினால் பிடித்து அடக்கும் வல்லமை அவனிடம் இருந்தது. தன் முதுகினால் மூச்சைப் பிடித்து யானையின் விலாப்புறத்திலே உந்தித் தள்ளினால் யானை அப்படியே கீழே சாய்ந்துவிடும். வெறும் பலம் மட்டும் உடையவனல்லன் திருமாவலி; திறமையும் மிக்கவன். வாள் வீச்சிலும், வேல் விளையாட்டிலும் வில் வளைத்தலிலும் மிகத் தேர்ந்தவன்.

போர்க்களத்திலே அவன் ஒரு மதயானை போல் திரிந்து விளையாடுவான். அவன் தன் வீர