பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 25

திருமாவலியைப் பிடித்து வந்து அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.

திருமாவலி, படைத் தளபதியாக இருக்கும்போது அவனைப் பிடிக்க இயலாது. ஆகவே, அவன் தல யாத்திரை போகும்போது பிடித்துவர ஏற்பாடு செய்தான் சேரன்.

சேரனிடம் அர்ச்சுனன் என்றொரு வீரன் இருந்தான். அவன் சூழ்ச்சியிலும் வாள் வீச்சிலும் வல்லவன். அவன் தலைமையில் பத்து வீரர்களை அனுப்பினான் சேர மன்னன். எப்படியும் திருமாவலியைக் கையோடு பிடித்து வரவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.

திருமாவலி ஒவ்வொரு தலமாகச் சென்று சிவ பெருமானை வழிபட்டுக் கொண்டு வந்தான். திருப்பெருந்துறை என்ற சிவத் தலத்திற்கு அவன் வந்தபோது, அர்ச்சுனனும் பத்து வீரர்களும் அவ்வூருக்கு வந்து சேர்ந்தனர்.

திருமாவலி, திருப்பெருந்துறை இறைவனை வணங்கி விட்டு வெளியில் வந்தான். அவனுடன் கூடவே இரு சிவனடியார்களும் வந்தனர். மூவரும் மற்றொரு திருத்தலத்தை நோக்கிக் காட்டுப் பாதையில் சென்றனர்.

காட்டின் நடுவே திடீரென்று அர்ச்சுனனும் பத்து வீரர்களும் சிவனடியார்களைச் சூழ்ந்து கொண்டனர். திருமாவலியின் தலையிலும் மார்பிலும் கவசமில்லை. உருத்திராக்க மாலையும்