பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 நல்வழிச் சிறுகதைகள்

வீரர்களின் வாளில் ஒன்றைத் துாக்கி அவனை நோக்கி வீசினான் திருமாவலி.

அர்ச்சுனனால் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. விரைவில் அவனும் திருமாவலியின் வாள் வீச்சுக்குப் பலியானான்.

எதிரிகள் பதினொருவரும் இறந்து போயினர். ஆனால், திருமாவலியாலும் நிற்க முடியவில்லை. எதிர்பாராத விதமாகத் தாக்கப்பட்டதால் அவன் பலவிடங்களில் படுகாயப்பட்டிருந்தான். அதனால் அவன் சோர்ந்து விழுந்தான்.

ஒதுங்கி நின்ற சிவனடியார் இருவரும் அவனருகில் ஓடிவந்தனர். இறக்கும் நிலையில் அவன் இருப்பதைக் கண்டு மனம் பதைத்தனர்.

அவர்களில் ஒருவர் அவனை நோக்கி, “திருமாவலி! பகைவர் எண்ணிக்கையைப் பார்த்த பிறகாவது ஒதுங்கியிருக்க வேண்டாமா ? இப்போது உன் உயிர் போகப் போகிறதே ! என்ன செய்வோம் ?” என்று துடித்தார்.

“உயிரைப் பற்றிக் கவலைப்படுபவன் வீரனாயிருக்க முடியாது. பகைவர்க்குப் பணிந்து மானத்தையிழப்பதை விட, பதினொருவரைக் கொன்றேன் என்ற புகழோடு இறப்பது சிறந்தது. அதுதான் வீரம்! இந்த வீரம் உங்களுக்கு இல்லாவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்காவது இருக்கும்படி