பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வல்லவன்பட்டினத்து மல்லன்

ல்லவன்பட்டினம் என்ற ஊரில் திண்ணன் என்றொரு பலவான் இருந்தான். திண்ணன் என்ற பெயரைக் கேட்டாலே அந்த வட்டாரத்தில் உள்ள தீயவர்கள் அஞ்சுவார்கள்.

திண்ணன் நல்ல உடற்கட்டு உடையவன். நாள்தோறும் விடாமல் செய்து வரும் பயிற்சினால் அவன் தன் உடல் வலிவைக் காப்பாற்றி வந்தான். வீரர்களுக்கு உரிய பல அருங் கலைகளில் அவன் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான். மற்போரிலும், சிலம்பம் ஆடுவதிலும் அவன் மிகுந்த புகழ் பெற்றிருந்தான்.

திண்ணன் இருந்ததால் வல்லவன்பட்டினத்தில் திருட்டு பயமே அற்றுப் போயிருந்தது. அவன் கைப்பிடியில் சிக்கி உயிரை விட்டு விடக் கூடாதென்று திருடர்கள் அந்தப் பக்கமே தலை காட்டாமல் இருந்தார்கள்.

திண்ணனிடம் ஒருநாள் ஒரு மனிதன் வந்து சேர்ந்தான். அவன் தன் பெயர் பஞ்சப்பன் என்று கூறினான். இந்த பஞ்சப்பன் என்ற மனிதன்