பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் . 39

வாதிட யாரும் வரலாம் என்று சவால் விடவும் அவர் தயங்கவில்லை.

அரசவையிலே நாற்பத்தொன்பது தமிழ்ப் புலவர்கள் இருந்தார்கள். இந்த நாற்பத்தொன்பது பேரும் நாற்பத்தொன்பது திருவிளக்குகளைப் போன்றவர்கள். அறிவுச் சுடர் ஒளிவிட்டு வீசும் திருமுகமும், குன்றென நிமிர்ந்த தோற்றமும், சிங்கத்தின் பெருமிதப் பார்வையும், அத்தனைக்கும் மேலே அடக்கம் நிறைந்த நெஞ்சும் உடைய அறிஞர்கள் அவர்கள்.

அரிசங்கரர் நெடிய உருவமும், நிமிர்ந்த தோற்றமும், தம்மை மிஞ்சிய புலவர் எவரும் இல்லை என்ற அகம்பாவ எண்ணமும், அந்த எண்ணத்தினால் ஏற்பட்ட அலட்சியப் பார்வையும் கொண்டு, பெருமதயானை போன்று, அவையிலே வீற்றிருந்தார்.

அரசவையிலே, புலவர்களின் அறிவுத் திறனை ஆராயும் அந்தப் போட்டியைக் காண மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தார்கள்.

பாண்டிய மன்னன் சங்கத்துப் புலவர்களை நோக்கிப் பேசினான். காசிப்பெரும் புலவர் அரிசங்கரர் வந்திருக்கிறார். வாதிட்டுப் புகழிட்ட நாடு தோறும் சென்று வந்துள்ளார். இதுவரை சென்றுள்ள நாடுகளனைத்திலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் நம் பாண்டிய நாட்டிலும் தம் பெருமையையும் திறமையையும் நிலை நாட்டிச் செல்ல அவர் எண்ணியுள்ளார். புலவர்களே,