பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் . 41

"அச்சம் மேலிட்டதால் தமிழ்ப் புலவர்கள் வாதிட முன் வரவில்லை. வாதுக்குத் தப்ப, சாத்தனார் சரியான வழி கண்டுபிடித்து விட்டார்!’ என்று ஏளனமாகக் கூறினார்.

தமிழ்ப் புலவர்கள் அமைதியாக இருந்தனர். ஆனால், பெருமக்களை எங்கிருந்தோ வந்த அவர் அலட்சியப்படுத்திப் பேசியதைக் கேட்டுக் குடிமக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

அங்கு புலவர்களின் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவனுக்கு மனம் துடித்தது. மதிவாணன் என்ற அவ்விளைஞன் மன்னனை நோக்கிக் கூறினான்.

‘மன்னர் பெருமானே ! சான்றோரை மதியாத தருக்காளராகவுள்ள இப்புலவர், வாதிட்டுத்தான் ஆக வேண்டுமென்று சாதிப்பாரேயானால், அதற்கு நான் முன் வருகிறேன். என்னுடன் வாதிக்கட்டும்.”

இவ்வீர உரைகளைக் கேட்ட அரிசங்கரர் குறுநகை புரிந்தார்.

“மிகச் சிறியவன் இப்பையன். இவனா என்னோடு வாதிட முடியும்?” என்றார்.

“சிறியவனானால் என்ன? சீறி வரும் சிங்கக் குட்டிபோல் நிற்கிறானே !! வாது தொடங்கட்டும் !” என்றார் பாண்டியர்.

அரிசங்கரர் கூறினார் : முதலில் நான் மூன்று கேள்விகள் கேட்கிறேன். அதற்கு