பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் . 47

குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தார். ஒரு புறத்தில் சுருண்டு படுத்திருந்த அந்த ஏழைச் சிறுவன் எழுந்து, அவரை நோக்கி வந்தான்.

“ஐயா, நான் ஓர் ஏழை. என்னை நீங்கள்தான் ஆதரிக்க வேண்டும் !” என்று கெஞ்சும் குரலில் அவன் பேசினான்.

சாத்தப்பர் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

“ஐயா, நீங்கள் என்ன வேலை சொன்னாலும் செய்கிறேன். எனக்கு வயிற்றுக்குச் சோறு போட்டுக் காப்பாற்றினால் போதும் !” என்று மேலும் கெஞ்சினான் அந்தச் சிறுவன்.

சாத்தப்பர் அவனை எதுவும் கேட்கவில்லை. வீட்டினுள் அழைத்துச் சென்று சாப்பாடு போடுமாறு தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டார்.

அந்தச் சிறுவன் பெயர் மாணிக்கம். அவன் சாத்தப்பர் அனுமதியுடன் வீட்டினுள் புகுந்து விட்டான். அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அவனுக்கு எந்த வேலையும் கொடுக்கப்படவில்லை. சாத்தப்பர் வீட்டில் தேவைக்கு மேல் ஆட்கள் நிறைந்திருந்தார்கள். வேலை எதுவும் பாராமலே சாப்பிட்டுக் கொண்டு பல பேர் இருந்தார்கள். அவரோ தம் வாணிகத்தை நாடி வெளியூர்களில் சுற்ற வேண்டியிருந்தது. வீட்டைக் கவனிக்க ஆள் இல்லை. இந்நிலையில் அங்கு வந்து சேர்ந்த மாணிக்கம் சில நாட்கள் வரை மற்ற சிலரைப் போல்