பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



58 நல்வழிச் சிறுகதைகள்

பாண்டியனால் இப்பேச்சுகளை நம்ப முடியவில்லை. ஒரு வணிகன் அவ்வளவு அற நோக்கம் கொண்டவனாக இருப்பானா என்பது அவனுக்கு வியப்பாகவே யிருந்தது.

அறம் வென்றான் என்ற வணிகனுடைய வள்ளன்மையை நேரில் அறிந்து வர வேண்டும் என்று பாண்டியன் எண்ணினான்.

மறுநாளே அவன் மாறு வேடத்தில் கொடை வழங்கு பட்டிக்குப் புறப்பட்டான். மன்னன் தலைநகரை விட்டுச் சென்ற செய்தி யாருக்கும் தெரியாது.

கொடை வழங்குபட்டியை நெருங்க நெருங்க, அறம் வென்றானின் புகழ் பாண்டிய மன்னன் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. பாணர்களும் விறலியரும் அறம் வென்றானின் புகழ் பாடியாடினர்.புலவர்கள் அறம் வென்றானை வாழ்த்திப் பாடிய பாடல்கள் சிறுவர்களால் பாடப் பெற்றன.

இரவலர்கள் அறம் வென்றானைத் தேடிச் சென்ற வண்ணம் இருந்தனர்.

கடைசியாகப் பாண்டியன் கொடை வழங்குபட்டிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான். அவன் அங்கு போய்ச் சேர்ந்தபோது, இருட்டத் தொடங்கி விட்டது.

கொடை வழங்குபட்டியின் ஒரு வீதி வழியாக மாறு வேடத்தில் இருந்த மன்னன் சென்று கொண்டிருந்தான். ஒரு வீட்டில் ஒரு கிழவி பரிதவித்துப்