பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 7

கீழே விழுந்தான். அவனைப் பிழைக்க வைக்க அரசர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

இப்படி இருவருக்கும் எந்நேரம் பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாகவேயிருந்தது.

இவர்களில் அரியநாதன் சிறந்த குணமுடையவன். வடுகநாதன் நல்ல குணம் சிறிது மற்றவன். பல சமயங்களில் அரசர் அரியநாதனைத் தாழ்ந்து போகும்படி கூறி விடுவார். அரியநாதன் நல்ல குணமுடையவனாயினும், தான் வடுகநாதனுக்கு இளைத்தவனல்ல என்று காட்டிக்கொள்ளும் வீராப்பு அவனிடம் இருந்தது. அரசர் வேண்டுகோளுக்காகவே அவன் பல சமயங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறான்.

எவ்வளவு அறிவுரைகள் கூறியும் அண்ணனுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வடுகநாதன் கருதவே இல்லை.

அரசர் உடல் தளர்ந்து இறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, இவர்களைப் பற்றிய கவலையாகவேயிருந்தார்.

தாம் எவ்வளவோ பாடுபட்டு உருவாக்கிய அரசு, இப்பிள்ளைகளின் ஒற்றுமையின்மையால் சின்னா பின்னப்பட்டுப் போய்விடுமோ என்று அவருக்கு ஒரே கவலையாயிருந்தது.

தாம் இறக்கு முன் தம் அரசை இருவருக்கும் பிரித்துக் கொடுத்து, இரு வேறு நாடுகளாகச் செய்ய வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தார். ஆனால்,