பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூதுரை

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம்-கொண்டபே
ராற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல்

(11)

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது மண்ணிரும் ஆகா ததனருகே சிற்றுாரல் உண்ணிரும் ஆகி விடும். (12)

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவனன் மரம். (13)

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத்-தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி. (14)

வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக் காகார மானாற்போல்-பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த வுபகாரம் கல்லின்மேல் இட்ட கலம். (15)