பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

31


காண வந்தபோது மேற்படி கம்பளத்தை மகாத்மாவுக்குப் பரிசாக வழங்கினாராம். மிகவும் விலை உயர்ந்த அந்தக் கம்பளத்தைத்தான் காந்திஜி அன்று முதல் போர்வையாக உபயோகித்து வருகிறாராம்.

மகாத்மாவுக்கு இப்படி அடிக்கடி அநேக பரிசுகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட அவருக்கு இத்தகைய பரிசுகள் ஏராளமாக வந்தன. ஏசுநாதர் பிறந்த புனித தினத்தன்று மகாத்மாஜியைத் தரிசிப்பதற்காகச் சில வெள்ளைக்கார ஸோல்ஜர்கள் ஸ்ரீராம்பூருக்கு வந்திருந்தார்கள். பிரார்த்தனை மேடையில் அவரைக் கண்டு, அவரிடம் ஏதேதோ விசித்திரமான பொருட்கள் நிறைந்த பெரிய அட்டைப் பெட்டி ஒன்றை தங்கள் அன்புக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார்கள்.

மகாத்மாஜி அந்தப் பெட்டியைத் தம் முன்னே எடுத்து வைத்துக்கொண்டு திறந்து பார்த்தார். முதன் முதலாக மகாத்மாஜி பெட்டிக்குள்ளே கையை விட்டதும் சில அபூர்வ சாமான்கள் வெளியே வந்தன. அவற்றைக் கண்டதும் மகாத்மாவுக்கும், மற்றவர்களுக்கும் சிரிப்புத்