பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

நவகாளி யாத்திரை


"இதில் வியப்பு ஒன்றும் இல்லை; ஆயினும் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி ஒன்று இருக்கிறது. இவை வெவ்வேறு ஜாதி இலைகளாயிருந்தும் எப்படி ஒரே செடியில் ஒற்றுமையாக வளர்கின்றனவோ, அப்படியே இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே இடத்தில் இருந்து ஒற்றுமையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

ஆகா! காந்திஜியின் வாக்கே வாக்கு!

மகாத்மாவின் இந்தப் பதிலைக் கேட்டபோது அந்தக் குடியானவருடைய முகத்திலே தோன்றிய திருப்தியையும், மகிழ்ச்சியையும் இனி ஒருமுறை காண முடியுமா என்பது சந்தேகம்தான். 

மூங்கில் பாலம்

குடியானவருடைய வீட்டிலிருந்து கிளம்பி, தர்மாபூருக்குச் செல்வதற்குள் வழியில் சுமார் ஏழெட்டு மூங்கில் பாலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. நவகாளி ஜில்லாவில் வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்கள் குறுக்கும் நெடுக்கும் காணப்படுகின்றன. அந்த வாய்க்கால்களைக் கடந்து செல்வதற்காக மூங்கில்களினால் பாலம் அமைத்திருக்கிறார்கள். இந்தப் பாலங்களில் நடந்து செல்வதென்றால் அதற்குத் தனிப்பட்ட திறமையும், தனிப்பட்ட பயிற்சியும் வேண்டியிருக்கின்றன.

இதைக் கேள்விப்பட்டிருந்த காந்திஜி, ஸ்ரீராம்பூரில் ஒரு மாத காலம் முகாம் போட்டிருந்த சமயம் தினந்தோறும் ஒரு மூங்கில் பாலத்தின் மீது நடந்து நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டார். கைக்கோலை