பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

45


சாபல்யமடைந்தார்கள்" என்று சரித்திரத்தில் படித்த விஷயம் என் நினைவுக்கு வந்தது. 

மயானக் காட்சி

தர்மாபூருக்குச் சமீபத்தில் பல பயங்கரச் சம்பவங்கள் நடந்திருந்தன. அத்தகைய பயங்கரப் பிரதேசம் ஒன்றுக்கு மகாத்மாஜி நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று மகாத்மாவை அங்கே அழைத்துச் சென்றார்கள். கிராமவாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி காந்தி மகானும் அந்த இடத்துக்கு அவர்களோடு நடந்தே சென்றார். பத்திரிகைப் பிரதிநிதிகளும் மற்றும் சிலரும் மகாத்மா காந்தியுடன் சென்றிருந்தோம்.

அங்கே போனபோது மயானத்துக்குள் காலடி வைப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. சுற்று முற்றும் எரிந்து விழுந்த கொள்ளிக் கட்டைகளும், சாம்பல் குவியல்களும், பச்சை மரங்கள் தீப்பட்டு பொசுங்கிப் போயிருந்த கோரக் காட்சியும், அருவருப்பையும், அச்சத்தையும் உண்டாக்கின.

அந்த மயானக் காட்சிகளுக்கு இடையே ஓர் இடத்தில் மண்டை ஓடுகளும், எலும்புக் கூடுகளும் கும்பலாய்க் குவிக்கப்பட்டிருந்தன.

மேற்படி கோரக் காட்சியைக் கண்ட காந்தி மகானுடைய உள்ளத் துடிப்பை அவருடைய நிர்மலமான முகம் பிரதிபலித்துக் காட்டியது.

சாந்த சொரூபியான காந்தி மகாத்மா சற்று நேரம் மோன நிலையில் ஆழ்ந்து போனார். பிறகு கண்களைக் கெட்டியாக மூடிக் கொண்டார். கைக்கோலை எடுத்து