பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நவகாளி யாத்திரை


போய்விட்டது. அந்த நகரின் வீதிகள், சாலைகள் எல்லாம் பாதாள உலகத்தில் அமுங்கிப் போனது போலவும், அதன் மீது புதிய நகரம் ஒன்று நிர்மாணமாகிவிட்டது போலவும் தோன்றுகிறது.

தியாகராய நகரின் தென்கிழக்குப் பிரதேசத்துக்கு 'ஹிந்துஸ்தானி நகரம்' என்று நாமம் சூட்டியிருக்கிறார்கள்.

தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபையைச் சுற்றியுள்ள மைதானங்கள், வெட்டவெளிகள், காலிமனைகள் ஆகிய எல்லா இடங்களையும் பந்தல் போட்டு மறைத்து விட்டிருக்கிறார்கள்.

மேற்படி ஹிந்தி பிரசார சபைக்கும் அதைச் சேர்ந்த ஹிந்துஸ்தானி நகரத்துக்கும் போகும் முக்கிய வீதிகளின் பிரவேச வாசல்களில் 'பஜாஜ் கேட்', 'கஸ்தூரிபா கேட்' என்ற பெயர்களில் மண்டபங்கள் வேறு அமைத்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் மாம்பலத்தின் தோற்றத்தையும், பெயரையும் மாற்றி நம்மையெல்லாம் திகைத்துத் திக்குமுக்காடச் செய்து வருகிறவர்கள் வேறு யாருமில்லை; தட்சிண பாரத ஹிந்துஸ்தானி பிரசார சபையினர்தான்! தங்களுடைய வெள்ளிவிழாக் கொண்டாட்டத்துக்காகவும், மகாத்மாஜியின் சென்னை விஜயத்துக்காகவுமே இம்மாதிரியெல்லாம் செய்திருக்கின்றனர்.

சாதாரண நாட்களிலேயே மாம்பலத்தில் புகுந்து ஒரு குறிப்பிட்ட இடம் போய்ச் சேருவதென்றால் பிரம்மப்பிரயத்தனமாகிவிடும். இப்போதோ சொல்ல