பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

53


வந்துவிட்டால் உங்களுக்கெல்லாம் உங்களை அறியாமலேயே பயித்தியம் பிடித்துவிடும். அப்போது அந்த வெறியை அடக்கிக் கட்டுப்பாடாகவும், அமைதியாகவும், ஒழுங்காகவும் இருக்க வேண்டும். எங்கே? இப்போது காந்திஜி வருவதற்கு முன்பாக ஒரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்து காட்டுங்கள் பார்க்கலாம்" என்றார். அவ்வளவுதான்; தெற்குப் பக்கம் உள்பட எல்லாத் திசைகளிலும் ஒரே நிச்சப்தம் குடிகொண்டது. (தெற்குப் பக்கத்தில்தான் ஸ்திரீகள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்!) அங்கங்கே சில தொண்டர்கள் ஹரிஜன நிதிக்காக ஜனங்களிடையே நின்று தகர உண்டியைக் குலுக்கிய சப்தம் தவிர வேறு பேச்சு மூச்சுக் கிடையாது. அப்போது ராஜாஜி மறுபடியும், 'மைக்' முன்னால் வந்து, "வாலண்டியர்கள் உண்டியைப் பலமாகக் குலுக்க வேண்டாம். அப்படிக் குலுக்கினால் உண்டியின் அடிப்பாகம் திறந்து கொள்ளும்" என்றார். அவ்வளவுதான்! உடனே ஒரு லட்சம் பேரும் தங்கள் மெளனத்தைக் கலைத்துக் கொண்டு குபிரென்று சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குள் மணி ஐந்து ஆகிவிடவே, பிரார்த்தனையின்போது செய்ய வேண்டிய பஜனைக்குப் பயிற்சி நடத்தும் பொருட்டு மகாத்மாவின் பேரன் கனு காந்தியும், பஜாஜின் மகன் ராமகிருஷ்ண பஜாஜும் மேடைக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிரார்த்தனை என்றால், கனு காந்தி பாடுவதைப் பிரார்த்தனைக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பின்னால் கோஷ்டியாகப் பாட வேண்டியது. இதற்காக திரு. கனுகாந்தி மேடைக்கு அரை மணி முன்னதாகவே வந்து எப்படிப் பாட வேண்டும், எவ்வாறு தாளம் போட