பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

நவகாளி யாத்திரை


சுசீலா நய்யாரும் நவகாளியில் புரிந்த சேவைகள் பொன்னெழுத்தில் பொறித்து வைக்க வேண்டியவையாகும்.

நவம்பர் 12-ஆம் தேதி மகாத்மாஜி ராம்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தைப் பார்வையிட்டார். அப்போது அவர் செளதுரி என்பவரின் மாபெரும் வீட்டைப் பார்க்க நேர்ந்தது. இந்த வீடு 32 அறைகள் கொண்ட மிகப்பெரிய கட்டிடம். மகாத்மா அந்த வீட்டை முழு ரூபத்தில் பார்க்கவில்லை; கரியும், சாம்பலும் நிறைந்த பாழான தோற்றத்திலேயே பார்த்தார்.

'காலா' என்ற திபேத் நாட்டு ஸ்பானியல் ஜாதி நாய் ஒன்று அங்கே சுற்றிக் கொண்டிருந்தது. இந்த நாயைப் பற்றின அபூர்வ சரிதை உள்ளே விவரிக்கப்பட்டிருப்பதை நேயர்கள் கவனித்திருக்கலாம்.

தட்டபாரா கிராமத்திலிருந்த ஸாஹாபாரி என்னும் ஒரு வீட்டை மகாத்மாஜி சில நிமிட நேரம் பார்வையிட்டார். அப்போது கொளுத்தும் வெயிலைத் தாளாத மகாத்மா ஒரு தென்னந்தோப்புக்குள் நுழைந்தார். நூற்றுக்கணக்கான கிராமத்துப் பெண்கள் அந்த இடத்தில் மகாத்மாவைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். கண்ணீரும் கம்பலையுமாகத் தங்கள் சோக சரிதத்தை எடுத்துக் கூறினார்கள். இந்துப் பெண்களின் புனிதமான மாங்கல்யங்களை முரடர்கள் பலாத்காரமாக அபகரித்துக் கொண்ட பயங்கரத்தைப் பற்றிச் சொன்னார்கள்.

இதையெல்லாம் கேள்வியுற்ற மகாத்மாஜி மனமுருகி, "நீங்கள் அனைவரும் ஆபத்தான இந்தச் சமயத்தில்