பக்கம்:நவக்கிரகம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவக்கிரகங்கள்

களே ஒளிரச்செய்து, வானத்தையும் நனந்தலே உலகத்தையும் அடை கிருய்."

சோதிகளிற் சிறந்த சோதி, உத்தமன், உலகை வெல்பவன், செல்வம் எய்துபவன், பெரியவன், உலகம் முழுதும் ஒளிர்பவன், ஒளி வீசுபவன், மகான் ஆன சூரியன் காட்சிக்குப் பரந்தவகை இருந்து, அழிவற்ற வெற்றியையும் தேசாகிய பலத்தையும் விரிக்கிருன்.'

அதர்வ வேதம், இருதய நோயையும் காமாலையையும் போக்கச் சூரியனே வழிபடும் விதத்தைச் சொல்கிறது. பசுவின் அகத்தில் உள்ள புழுக்களேச் சூரியன் ஒழிப்பான் என்று கூறுகிறது."

மந்திரங்களுக்கெல்லாம் தாயென்ற சிறப்பையுடைய காயத்திரிக்குத் தெய்வம் ஸ்விதாவாகிய சூரியன். அந்த மந்திரம் சைவர், வைஷ்ணவர் என்ற வேறுபாடின்றி யாவராலும் ஜபிக்கப் பெறுகிறது.

- 3 வால்மீகி ராமாயணத்தில் கதிரவனுடைய துதியாகிய ஆதித்திய ஹ்ருதயம் என்ற பகுதி ஒன்று இருக்கிறது. ராவணைேடு போர்

செய்த ராமர், சோர்வை அடையாமல் இருக்கும்பொருட்டு அகத்திய முனிவர் தோன்றி, அவருக்கு ஆதித்திய ஹ்ருதயத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தின் பெருமையை, "பகைவர் அனேவரையும் வெல்வதற் குரிய ரகசியத்தைக் கேட்பாயாக. ஆதித்திய ஹ்ருதயம் என்ற பெயரையுடைய இந்த மந்திரம் வெற்றியைத் தருவது; குறைவற்ற பயனே அளிப்பது; மிகத் துய்மையானது: எல்லாப் பாவங்களேயும் காசம் செய்வது; மனக்கவலையையும் உடம்பிணியையும் போக்குவது' என்று விரித்துச் சொல்லிப் பின் அந்த மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்தத் துதியில் கதிரவனுடைய பெருமைகள் விரிவாக வருகின்றன. ஆதித்தியன், ஸ்விதா, சூர்யன், ககன், பூஷா, கபஸ்திமான், ஸ்வர்ண ஸ்த்ருசன், பானு, ஹிரண்ய ாேதஸ், திவாகரன், ஹரிதசுவன், ஸஹஸ்ரார்ச்சிஸ், ஸப்தஸப்தி, மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, வியோமநாதன், பிங்களன், கவி, மகாதேஜஸ், லோகஸாr என்பன போன்ற திருநாமங்கள் பல சொல்லப் பெறுகின்றன. அவற்றிலிருந்து கதிரவனேப்பற்றிய செய்திகள் பலவற்றை உணர்ந்துகொள்ளலாம். அதிதியின் புதல்வன், உலகை உண்டாக்குபவன், மக்களைச் செயல் செய்யுமாறு துரண்டுபவன், வானவெளியில் உலாவுபவன், மழையால் உலகைப் புரப்பவன். கதிர்களே உடையவன், பொன்வண்ணமுடையவன், ஒளியை உடையவன், பகலேச் செய்பவன், பசும் புரவிகளே உடையவன், ஆயிரங் கதிரோன், ஏழு குதிரைகளே உடையவன், இருளே அழிக்கும் கதிர்களைப் பெற்றவன், அழிந்தவற்றை ஆக்குபவன், வழிபடுவோர் உள்ளம் குளிரச்செய்பவன், மாலேயில் வெம்மை அடங்குபவன், பனியை அழிப்பவன், வானத்தின் மன்னன், வேதங்களின் கரையைக் கண்டவன்,

1. லாமவேதம்: எம். ஆர். ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு. - 2. அதர்வ வேதம்: எம். ஆர். ஜம்புநாதன் மொழிபெயர்ப்பு: ப. 18, 56,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/11&oldid=584225" இலிருந்து மீள்விக்கப்பட்டது