பக்கம்:நவக்கிரகம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரியன் 7

பாகவதத்தில் சூரியனைப்பற்றிய செய்திகள் பல உள்ளன. சூரியன் மேருமலையை வலம் வருகிருன். அவன் கிரகங்களுக்கும் கட்சத்திரங்களுக் கும் தன் சுடரை வழங்குகிருன். மழை, பனி, வெப்பம் ஆகியவற்றை அவன் உண்டாக்குகிருன். அவனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரம். அதற்குப் பன்னிரண்டு ஆரக்கால்கள். அந்தத் தேரில் வேதத்தின் ஏழு சக்தங்களும் எழு பரிகளாக இருக்கின்றன. அவனுடைய தேரில் அங்குஷ் டப் பிரமாணம் உள்ள வாலகில்லியர்; என்ற முனிவர் அறுபதியிைரம் பேர் இருந்து சூரியனைத் துதிப்பார்கள். புலத்தியர் முதலிய பன்னிரண்டு பேர்கள், மாதத்துக்கு ஒருவராக அவனைத் துதிப்பார்கள், வாசுகி முதலிய காகங்களில் ஒவ்வொன்று ஒவ்வொரு, மாதத்தில் சூரியன் தேரை இழுத் துச் செல்லும். அத்தேரைச் சுற்றிச் சில அரக்கர் திரிவர்; கந்தருவர் பாடுவார்கள்: அரம்பையர் ஆடுவர். மும்மூர்த்திகளின் அமிசமாகவும் சூரியன் திகழ்கிருன்..

வையகம் படைத்தல்செய் மலரின் அண்ணலும் பொய்யறு மாயனும் புகல்முக் கண்ணனும் ஐயசெங் கதிர்களோர் ஆயி ரந்திகழ் வெய்யவ ளும்என விளம்பும் நூல்களே. மார்க்கண்டேய புராணம், பிரம புராணம் முதலிய புராணங்களி லும் தலபுராணங்களிலும் சூரியனைப்பற்றிய வரலாறுகள் பலபடியாகக் காணப்படுகின்றன. f

இருள்மயமான அண்டத்தைப் பிரமன் பிளந்தபோது, ஒம் என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலியிலிருந்து தேசோமயனை சூரியன் தோற்றினன் என்று மார்க்கண்டேய புராணம் கூறும்.

சிவாகமங்கள், சிவபெருமான், சூரிய மண்டலத்தின் நடுவே ஒளிர் கிருரென்றும், சூரியனகவே விளங்குகிருரென்றும், அவருக்குரிய அட்ட மூர்த்தங்களில் ஒன்று சூரியனென்றும் சூரியனை வலக்கண்ணுக உடை யவர் என்றும் சொல்கின்றன. சூரியனுக விளங்கும்போது, சிவகுரியன் என்ற திருநாமத்தோடு சிவபெருமான் விளங்குகிருர். சிவகுரியன் நான்கு முகம், எட்டுத் தோள், சிவந்த ஆடை ஆகியவற்றை உடையவன்.

சூரியனுக்குப் பல மனேவியர் இருப்பதாகப் புராணங்கள் கூறும். சம்ஞா தேவியிடம் பிறந்தவர்கள் வைவச்சுத மனு, யமன், யமுனே,அச்வினி தேவர்கள்: சாயாதேவியினிடம் பிறந்தவர்கள் சனி, சாவர்ணி மனு, தபதி என்னும் பெண் சருவதிணி என்னும் மனேவியிடமாகப் பிருகு, வால்மீகர் என்போர் பிறந்தனர். ஊர்வசியின்மேற் காதல் உண்டானபோது தோன்றியவர் அகத்தியர், வசிட்டர்."

5 .. தமிழ் நூல்களிலிருந்து கதிரவனுடைய வழிபாட்டைப்பற்றிய செய்திகள் பல கிடைக்கின்றன. தொல்காப்பிய உரையில் பேராசிரியர், சூரியனுடைய துதியாக இரண்டு செய்யுட்களேக் காட்டுகிருர்.

1. பாகவதம், 5-ஆம் அத்தியாயம். 2. அபிதான சிந்தாமணி, ப. 721, 722.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/14&oldid=584228" இலிருந்து மீள்விக்கப்பட்டது