பக்கம்:நவக்கிரகம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நவக்கிரகங்கள்

'உலகங்களேயெல்லாம் படைத்த பிரமன் முதலிய தேவர்களே வெளி யாக்கினவன் நீ ஆதலால், பருதியஞ் செல்வனே, கின் திருவுள்ளத்தில் உள்ள அருள், எங்களிடமிருந்து நீங்காமல் இருக்கட்டும்' என்று ஒரு பாடல் சொல்கிறது.

அண்டங்கள் பலபயந்த அயன்முதலாம் இமையோரைக் கொண்டங்கு வெளிப்படுத்த கொள்கையை ஆகலின் ஓங்குயர் பருதியஞ் செல்வ கின் நீங்கா உள்ளம் நீங்கன்மார் எமக்கே." மற்ருெரு செய்யுள், கதிரவன் மனக்கமல மலரையும் மலர்த்துபவன்' என்று சொல்கிறது. அவனே இருளேயும் ஒளியையும் வெளிப்படுத்து பவன். நட்சத்திரங்களைப் பகலில் தன்பால் மறைத்துக்கொண்டு, இரவில் வெளிப்படுத்துகிருன். சந்திரனே ஒளி உடையவளுகப் படைத்தவனும் சூரியனே. இவ்வாறு கதிரவன் புகழை விரிவாகப் பாடுகிறது.

நீராகி நிலம்படைத்தன; நெருப்பாகி நீர்பயந்தன; ஊழியிற் காற்றுஎழுவினை; ஒளிகாட்டி வெளிகாட்டினை என்று ஐம்பெரும் பூதங்களுக்கும் ஆதாரமாகவே சொல்கிறது.

சிலப்பதிகாரத்தில், தொடக்கத்திலேயே இளங்கோவடிகள் சந்திரனேயும் சூரியனையும் வாழ்த்துகின்ருர்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலந்திரித லான் - என்பது கதிரவனே வாழ்த்திய பாடல்.

கண்ணகி, தன் கணவனகிய கோவலன், அரசியின் சிலம்பைத் திருடிய கள்வனென்று குற்றம் சாற்றப்பெற்றுக் கொலேயுண்டதை அறிந்து, வருந்தி, எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கும் கதிரவனேப் பார்த்து. 'காய் கதிர்ச் செல்வனே! கள்வனே என் கணவன்?' என்று கேட்டாள். உடனே சூரியன் குரல் அசரீரியாகக் கேட்டது;

"கள்வனே அல்லன்; கருங்கயற்கண் மாதராய் * ஒள்எரி உண்ணுமிவ் ஆர்? என்பது அக்குரல்.

சூரியனைப் பாலை நிலத்துக்குத் தெய்வமாகக் கொள்வது ஒரு சாரார் tv கொள்கை. 'மழையையும் காற்றையும் தருகின்ற ஞாயிறு பாலைக்குத்

தெய்வமாயினமை' என்று கச்சினர்க்கினியர் ஒரிடத்தில் எழுதுகிரு.ர்.

கனைகதிர்க் கனலியைக் காமுறல் வளிதரும் செல்வனை வாழ்த்தவும்! - என்ற கலித்தொகை அடிகளிலிருந்து சூரியனை வழிப்டும் வழக்கம் இருந்

1. தொல்காப்பியம், செய்யுளியல், பேராசிரியர் உரை, மேற்கோள்: "தடங் . . . . . . கடற் பூத்த.", . . -

2. சிலப்பதிகாரம், 18: 52-3. . . . . .”

கலித்தொகை 16:16, உரை. 4. கலித்தொகை. 16.

s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/15&oldid=584229" இலிருந்து மீள்விக்கப்பட்டது