பக்கம்:நவக்கிரகம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரியன 11

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகிய ரீ முத்துசாமி தீட்சிதர் நவக்கிரகங்களின்மேல் ஒன்பது கீர்த்தனங்கள் இயற்றி யிருக்கிருர். ஒவ்வொரு பாட்டி லும் அந்த அந்தக் கிரக வரு ணனேயும் மந்திரமும் வழிபாட் டின் பயனும் அமைத்திருக் கிருர். 'சூர்ய மூர்த்தே நமோஸ் துதே' என்று தொடங்கும் கீர்த்தனம் கதிரவனைப்பற்றி யது. சூரியன், சாயா தேவியின் கணவன். காரிய காரண ரூப மாக இருப்பவன். உலகத்துக்கு ஒளியை வழங்குபவன், சிங்க ராசிக்கு அதிபதி. உயர்ந்தோர் போற்றும் ஒளிப் பிழம்பான வன். உடல் நலத்தை அருள் பவன். தாமரைக்கு நண்பன். சூரியன் வேறு ஒரு பழைய ஓவியம். உலகத்துக்கு மி த் தி ர ன். - - ஆயிரங் கதிருடையவன். கர்ணனேப் பெற்றவன், கொடிய பாவத் தைப் போக்குகிறவன். அக்கினி உருவுடையோன். குரு குகருக்கு மகிழ்ச்சியைத் தருபவன். சுயம்பிரகாசன். ஞானிகளாற் புகழப் பெறுபவன். பகலே விரிக்கும் மாணிக்கம் அனேயவன். கிரகங் களுக்குள் சிறந்தவன். ஆண்மையுடையோரின் பூசனையைப் பெற்றவன். மக்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம் சான்ருக இருப்பவன். ஒளியு டைய ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரை உடையோன். சூரியாஷ்டாட் சர மந்திர ஸ்வரூபி. பொன்னிற மேனி உடையவன். பிரம்மா, விஷ்ணு, சிவனென்னும் மும்மூர்த்திகளின் உருவமாய் இருப்பவன். புத்தியையும் முக்தியையும் அளிப்பவன்' என்பவை திட்சிதர் கீர்த்தன விஷயங்கள்.

இந்தக் கீர்த்தனத்தை ஒவ்வொரு நாளும் அன்போடு பாடினல் எல்லா நலமும் கிடைக்கும் என்ற பயனையும் தீட்சிதர் சொல்லியிருக்கிரு.ர்.

குரிய நமஸ்காரத்துக்குரிய மந்திரம் தனியே உண்டு. அதனல் கதிரவனே வழிபட்டால் கண் ஒளி பெருகும் என்பர். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி இதைக் குறிக்கிறது.

மயூரகவி என்ற வடமொழிப் புலவர் குரிய சதகம்' பாடிக் கண் பெற்ருர் என்பது கர்ண பரம்பரையான செய்தி. o -

வாழி பகல்செய்வோன் வாழி ஒளிஉருவன் வாழியோர் ஆழித்தேர் மன்னுசுடர்-வாழியரோ ஞாலம் விழிதிறப்ப கல்லோர் புகழுரைப்பக் காலம் விளக்கும் கதிர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/18&oldid=1006399" இலிருந்து மீள்விக்கப்பட்டது