பக்கம்:நவக்கிரகம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நவக்கிரகங்கள்

பாட்டைக் கண்டு ஐயுறுகிருள். அந்த ஐயத்தைப் போக்கிக்கொள்ள வேண்டி அந்த மங்கையைப் பார்த்து, இதோ பிறை தோன்றியிருக் கிறது. இதைத் தொழுவது மகளிர் இயல்பு. இதை யுேம் தொழுவா யாக!' என்று சொல்வாள். அதுவே பிறை தொழுகென்றல் என்னும் துறையாகும். கன்னிமகளிர் எருவைக் கையில் வைத்துத் தூவிப் பிறை யைத் தொழுவார்கள். சந்திரன் பயிர்களுக்குத் தலைவனுகையால் பயிரை வளர்க்கும் எருவைக் கொண்டு, அவனேக் கும்பிடும் வழக்கம் ஏற்பட்டது. தோழியின் கூற்றைக் கேட்ட காதலி, பிறையைத் தொழமாட்டாள். அவள் இப்போது ஒரு காதலனே அடைந்துவிட்டாள். ஆதலால் வேறு தெய்வத்தை வழிபடுவது முறையன்று. எனவே, தோழி, பிறையைத் தொழு என்று சொன்னவுடன் அந்தப் பெண் நாணம் அடைந்து, தலே குனிந்து, தொழாமல் கிற்பாள். அந்தக் குறிப்பைக் கொண்டு தோழி, அவள் தனக்குரிய காதலனைப் பெற்றுவிட்டாள் என்று உணர்ந்துகொள்வாள். கோவை என்னும் பிரபந்தத்தில், பிறை தொழுகென்றல்' என்ற துறைக் குரிய பாடல்கள் இருக்கின்றன. சந்திரனுடைய பெருமையைத் தோழி எடுத்துச் சொல்வதை அங்கே காணலாம்.

"மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு; மறந்தும்மற்றப் பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கே அடியேன் உய்வான் புகஒளிர் தில்லைகின் ருேன்சடை மேலதொத்துச் செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே'

என்பது திருக்கோவையாரில் வரும் பாடல்.

சிறு குழந்தைகளுக்கு நிலாவைக் கண்டால் அளவற்ற களிப்பு. 'அம்புலிமானே வா வா என்று அழைப்பார்கள். கிலா கிலா வா வா, கில்லாமல் ஓடி வா, மலேமேலே ஏறி வா' என்று தம் சிறு கைகளே ஆட்டி, அழைப்பார்கள். இவ்வாறு அழைக்கும் பருவத்தை அம்புலிப் பருவம் என்று புலவர்கள் சொல்வார்கள். பெரியாழ்வார், கண்ணபிரானேடு அம்புலியை விளையாட அழைக்கும் பாசுரங்கள் பத்துப் பாடியிருக்கிரு.ர்.

"தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்

பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி அளேகின்றன்

என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதி -

. கின்முகன் கண்ணுள வாகில் இேங்கே நோக்கிப்போ' என்று அழைக்கிருர். பிள்ளைத் தமிழ் என்ற ஒருவகைப் பிரபந்தங்களில் அம்புலிப் பருவம் என்றே ஒரு பகுதி உண்டு. அதில் சந்திரனுடைய

பெருமைகளும் வரலாறும் வரும்.

1. மறந்தும் பொய்யான தேவர்களிடம் புகாமல் தன் பொன்னடியி லேயே புகல் புகும் படியாக, விளங்குகின்ற தில்லையில் நின்ற சிவ பெருமர்னுடைய சடையின்மேல் உள்ள பிறையை ஒத்து, செக்கர்வான அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கு மைவார்ந்த கரிய கண்ணையுடையாய், உன் செங்கரங்களைக் கூப்புவாயாக’ என்பது இதன் பொருள். - . . . . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/27&oldid=584241" இலிருந்து மீள்விக்கப்பட்டது