பக்கம்:நவக்கிரகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்காரகன் விரித்தபெருங் கிளைகளொடும் மக்களொடும் நலம் நுகர்ந்து மிகுநாள் வைகிப் புரித்தபெருஞ் சடைப்பெருமான் திருக்கயிலை புகுந்துகதி புகுது வாரால்"14 என்று செவ்வாய்க்கிழமை விரதத்தைப்பற்றி உபதேச காண்டம் சொல் அங்காரகனுடைய திருமேனி, ரத்தம் போலச் சிவந்தது. அவன் செவ்வாடையன், செம்மலர் மாலை புனைபவன். நான்கு திருக்கரங்களை உடையவன். வலத் திருக்கரங்களில் அபயமும் சக்தியாயுதமும் தரித் திருப்பான். இடத் திருக்கரங்களில் கதையும் சூலமும் திகழும். அங்காரகனுக்கு மேஷ வாகனம் என்று பல நூல்கள் சொல்கின்றன . சிங்காதனத்தில் வீற்றிருப்பதாகச் சொல்வதும் உண்டு. எட்டுக் குதிரை கள் பூட்டிய பொற்றேரில் எழுந்தருளும் திருக்கோலம் உடையான் என் றும் ஒரு நூலால் அறிகிறோம். 2 ஸ்ரீ முத்து சாயி தீக்ஷிதரவர்கள், 'அங்காரகம் ஆச்ரயாயி' என்று தொடங்கும் கீர்த்தனத்தைச் சுருட்டி ராகத்தில் பாடியிருக் கிறார். அது அ ங் காரகன் பெருமையைச் சொல்வது. 'அங் காரகன் தன்னை வணங்குபவர்க ளுடைய விருப்பங்களை நிறை வேற்றுபவன். மங்கள வாரத் துக்கு அதிபதி. நிலமகளின் , சேய், மேஷ ராசிக்கும் விருச்சிக ராசிக்கும் உரியவன். செவ் வண்ண (மேனியன், செவ்வாடை. யும் செந்நிற மாலை யும் என் / 14 / I - புனைபவன், சக்தி, சூலம் என் னும் படைகளை ஏந்துபவன். மங்கலத் திருவுரு வுடையவன். சங்கனைய திருக்கழுத்தினன். நலத்தைச் செய்பவன். ஆட்டை - ஊர்தியாக உடையவன். மகர ராசியில் உச்சத்தை அடைய வன். தேவரும் தானவரும் பணி - 2 கின்ற சிறப்புடையவன். புன் - கோ . னகை பூத்த" திருமுகத்தினன். பூமிதேவியிடம் வளர்ந்து - - -- --- --------- - 1. உபதேச காண்டம், சிவவிர்த மான்மியச் சருக்கம், 4. கிளைகள் -- சுற்றத்தார்; நுகர்ந்து - அநுபவித்து; வைகி கதி - சிவகதி. - ' 2. IFHindu Iconography by T. A, Gopinatha R40, ', '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/32&oldid=1006456" இலிருந்து மீள்விக்கப்பட்டது