பக்கம்:நவக்கிரகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக்கிரன்

"கொடிய அவுணர் கிருதர்தொழும் குரவன் பெயர்சுக் கிரணுகும்

படவெவ் வரவம் மருங்கசைத்துப் பரவைத் திரையின் உருத்தெழுந்த விடமுண் டிருண்ட கண்டன் அருள் மிருதசஞ் சீவி னி.என்னும் ஓடிவில் விஞ்சை இனிதுணர்ந்த உரவோன் ஈங்கு வைகினனல்.’

பிருகு முனிவருடைய திரு மகனக உதித்தவன் பார்க்க வன். அவன் காசி நகரம் சென்று அ ங் கே லிங்கம் ஒன்றை கிறுவிப் பூசித்தான். இறைவன் காட்சி கொடுக்காத தல்ை மிக வருத்தம் அடைந்து, புலன்களே அடக்கித் தவம் பு ரி ய த் தொடங்கினன். ஆயிரம் ஆண்டுகள் கொடிய தவம் செய்ததை அறிந்த சிவ பெருமான் அவன்முன் எழுங் தருளி, "நீ செய்த தவத்துக்கு உள்ளம் மகிழ்ந்தோம்” என்று சொல்லி மிருத சஞ்சிவினி என்ற மந்திரத்தை உபதேசம் செய்தான். அம் மந்திரத்தைக் கூறினல் இறந்தவர்கள் உயிர் பெற்று எழுவார்கள்." -

கிற்பனவும் நடப்பனவுமா கிய பொருள்கள் கிறைந்த மூன்று உலகங்களையும் தாம்தாமே ஆட்சி புரிய வேண்டுமென்று தேவர் களும் அசுரர்களும் கூறி, ஒருவரை ஒருவர் பகைத்தனர். அப்போது அமரர், தாம் வெல்ல வேண்டும் என்ற நினைவிஞல் பிருகஸ்பதியைத் தங்க ளுக்குக் குருவாகக் கொண்டு, வேள்விகளைப் புரியத் தொடங்கினர். அசுரர் கள் யாவரும் சேர்ந்து பிருகு முனிவர் புத்திரளுகிய சுக்கிரனேத் தம் குருவாகக் கொண்டனர். -

அமரருக்கும் அவுனருக்கும் போர் மூண்டது. அமரரால் போரில் உயிரிழந்த அவுணர்களைச் சுக்கிரன் மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்ப்பித்தான். அதனல் அசுரர்கள் உயிர் பெற்று, மீண்டும் தேவர்க ளோடு பொருதனர்.” - -

சுக் கிரன்

1. காசிகாண்டம்: சுக்கிரன் உலகம் கண்ட அத்தியாயம். 2. மகாபாரதம்: ஆதி பர்வம் - 70-ஆம் அத்தியாயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/46&oldid=1006480" இலிருந்து மீள்விக்கப்பட்டது