பக்கம்:நவக்கிரகம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நவக்கிரகங்கள்

சர்மிஷ்டை என் மகள் தேவயானிக்கு ஏவல் புரிபவளாக இருக்க வேண் டும். தேவயானி தன் கணவன் வீட்டுக்குப் போகும்போதும் அவளுடன் சர்மிஷ்டை செல்ல வேண்டும்” என்று கூறினன். அவுனர் தலைவன் அதற்கு உடம்பட்டுச் சர்மிஷ்டையையும் இன்னும் ஆயிரம் மகளிரையும் தேவயானிக்கு ஏவலாட்டியராக அனுப்பினன்."

தேவயானி, யயாதி என்னும் மன்னனே மணந்தாள். அவளுடன் சர்மிஷ்டையும் அவளுடன் இருந்த ஆயிரம் மகளிரும் சென்றனர். சில காலம் சென்ற பின் யயாதி சர்மிஷ்டையைக் காதவித்தான்; தேவயானி யைப் புறக்கணித்தான். அதை அறிந்த சுக்கிரன், கீ மூப்பை அடைவா யாக!' என்று சபித்தான். பிறகு அவன் பணிந்து வேண்ட, 'உன் மூப்பை யாரேனும் தன் இளமையைக் கொடுத்து மாற்றிக்கொள்ள முன் வந்தால் அவனுக்குக் கொடுக்கலாம்” என்று அருள் செய்தான்."

3. இானவாசிட்டம் என்ற நூல் ஒரிடத்தில் சுக்கிரனுடைய வரலாற் றைக் கூறுகிறது: முதலில் பிருகு புத்திரளுகப் பிறந்து, அவ்வுடலே விட்டு வேறு உடலை எடுத்து, விசுவாசி என்ற தெய்வப் பெண்ணே விரும்பி, மீட்டும் தேசார்ணவம் என்ற காட்டில் ஒரு வேதியணுகப் பிறந்தான். அப்பால் கோசல நாட்டுக்குத் தலைவனாகவும் வேடகைவும் அன்னமாகவும் உருவெடுத்தான். பெளண்டர நாட்டின் தலைவனாகவும் சூரிய வம்ச குருவாகவும் வித்தியாதர அரசனுகவும் விளங்கினன். மறுபடியும் வேதிய ஞகி வேடகிைச் சைவாசாரியணுகித் திரிந்தான். மீட்டும் மூங்கிற் காடாய் மாளுய் மலைப்பாம்பாய்த் தோன்றி, இறுதியில் கங்கைக் கரையில் ஒரு வேதியளுகப் பிறந்து வாழ்ந்து வந்தான். அப்பாேது பிருகு முனிவரும் காலனும் அவனைக் கண்டு, அவனுடைய நிலையை உணர்ந்து, அருள் புரிந்து, முன்னேப் பிறப்பை உணரும் உணர்வையும் ஞானத்தையும் வழங்கினர். காலனுடைய ஆணையால் அவன் அசுர குருவான்ை."

அசுரர்களின் வேண்டுகோளின்படி சுக்கிரன் சிவபிரான நோக்கிச் சில காலம் தவம் செய்தான். அப்போது இந்திரன் சயந்தியென்னும் அழகிய அணங்கை அவன்பால் அனுப்பித் தன் அழகு, ஆடல் முதலியவற்றி ல்ை அவனே மயங்கச் செய்தான். அவள் அப்படியே சுக்கிரனே மயக்க, அவன் தவம் கலந்து, அவளோடு அளவளாவினன். யாருடைய கண் அணுக்கும் புலப்படாமல் தனியிடம் ஒன்றில் பத்து ஆண்டுகள் அவளுடன் இன்புற்றிருந்தான். அப்போது தேவகுருவான பிருகஸ்பதி சுக்கிர லுடைய உருவத்தை எடுத்துக்கொண்டு, அசுரரிடம் சென்று, அவர் களுடன் இருந்து, அவர்களைத் தம் விருப்பப்படியே செயல் செய்யச் செய் தார். சுக்கிரன் இன்ப மயக்கத்திலிருந்து விடுபட்டு, அசுரலோகம் சென்று பார்க்கையில் வியாழ பகவான் தன் உருவோடு இருத்தலேக் கண்டான்.

1. மகாபாரதம், 72.74 அத்தியாயங்கள். 2. மகாபாரதம், 75-78 ஆம் அத்தியாயங்கள்.

அபிதான சிந்தாமணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/49&oldid=584263" இலிருந்து மீள்விக்கப்பட்டது