பக்கம்:நவக்கிரகம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தான்.

சனி பகவான்

"முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலா னேர்கள்

மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமையல் லால்வே றுண்டோ? கனிவுன தெய்வம் நீயே கதிர்சேயே, காகம் ஏறும் சனியனே உனைத்து தித்தேன்; தமியனேற் கருள்செய் வாயே."

-நவக்கிரகத் தோத்திரம்

திருக்கோயில்களில் வைக் கிரங்களேத் தனியே ஒரிடத்தில் வைத்துப் பூசிக்கிருர்கள். அங் தத் தொகுதியில் இருப்பதோடு சூரியனுக்கும் சந்திரனுக்கும் தனித்தனியே இ ட ங் க ள் உண்டு. அவை இருக்கும் இடத்தை யாரும் கவனிப்ப தில்லை. ஆனல் சனி பகவானுக் குத் தனியே கோயில் இருப்பதை அங்கே கூட்டமாக வழிபடும் மக்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். சனி பகவானல் உண்டாகும் துன்பங்களினின் றும் நீங்க வேண்டும் என்ற ஆவல் மனிதர்களுக்கு மிகுதி யாக இருப்பதுதான் காரணம்.

சூரியன் துவஷ்டாவின் பெண்ணுகிய ஸஞ்ஞரிகை என் பவளே மணம் செய்து வாழ் கையில் அவர்களுக்கு வைவச்சுத மறு. யமன், யமுனே என்னும் மூவரும் சேய்களாகப் பிறந்தனர். அதன்பின் வஞ்ளுதிகை சூரியனுடைய வெப்பத்தை ஆற்றமாட்டாதவ ளாகித் தன் தந்தை வீட்டுக்குப் போக எண்ணினள். சூரியனுக்குத் தெரியாமல் செல்ல வேண்டுமென்று துணிந்து தன்னுடைய கிழலேயே ஒரு பெண்ணுகச் செய்து அவளை அங்கே விட்டுவிட்டுத் தங்தையிடம் சென்றுவிட்டாள். அவளுடைய நிழலில் தோன்றியவளுக்குச் சாயாதேவி என்ற பெயர் அமைந்தது. சஞ்ளுகையின் விருப்பப்படியே சாயாதேவி, தான் வேறு ஒருத்தி என்பதைத் தெரிவிக்காமலே சூரியனோடு வாழ்க் தாள். சூரியனும் அவளைச் சஞ்ஞகை என்றே எண்ணி அளவளாவி

சனிபகவான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/55&oldid=1006490" இலிருந்து மீள்விக்கப்பட்டது