பக்கம்:நவக்கிரகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேது 59

கேதுவினுடைய நிறம் கறுப்பென்றும், அவன் இரண்டு கரங்களை உடையவன் என்றும், ஒரு கை அபயத்தை உடையதென்றும், மற்ருென்று கதையை ஏந்தியதென்றும் கூறுவர். விசுவகர்ம சிற்ப சாஸ்திரத்தில் அவ னுடைய தேர், பத்துக் குதிரைகள் பூட்டியது என்ற செய்தி வருகிறது."

புரீ முத்துசாமி தீட்சிதர் பாடிய கீர்த்தனையில் உள்ள செய்திகள்.

அசுரர்களுக்குள் பெரியவன் கேது. சாயாக்கிரகங்களில் சிறந்தவன்; பலவகை மணிகள் இழைத்த பெரிய திருமுடியைக் கவித்தவன்; மஞ்சள் முதலிய பல வண்ணமுடைய ஆடையைப் புனேக்தவன்; மனித உடலாகிய பீடத்தில் இனிதே எழுந்தருளியிருப்பவன்; புதிதாய்க் கிரக பதவியைப் பெற்ற ராகுவினுடன் இணைந்திருப்பவன். அவனுடைய அதிதேவதை பிரம்மா. அவனுடைய மந்திரம் கேதும் க்ருண்வன்' என்ற தொடக் கத்தை உடையது. கேது, மிக்க கோபம் உடையவன்; ஜைமினி கோத் திரத்தில் பிறந்தவன்; கொள்ளு முதலியவற்றை உண்பவன்; முக்கோண வடிவத்தைப் பெற்ற கொடியை ஏந்தியவன்; முருக வேளுக்கு வெண் கவரியை வீசுபவன். குணங்களையும் குறைகளையும் வென்ற ஞானிகளுக்கு அணியாக இருப்பவன். கிரகணம் முதலியவற்றிற்குக் காரணமானவன்; வான வீதியில் மேருவை இடமாகச் சுற்றி வருகிறவன். . . *

வேதம ங் தி ர மா கி ய கேதும் க்ருண்வன்' என் ப த ம் கு ரிஷி மதுச் சந்தர்; அதற்குரியது காயத் திரிச் சந்தம். அதனையன்றி, 'ஓம் க்ரூம் என்று தொடங்கும் மற்ருெரு மந்திரமும் உண்டு. அது ஜயச்சந்த ரிஷியையும் காயத்திரிச் ச க் த த் ைத யு ம் உடையது.

நவக்கிரக ஆராதனக் கிர. மத்தைக் கூறும் நூலில் வேத மந்திரத்துக்குரிய அங்கங்கியாச கரங்கியாசங்களும் உள்ளன. of . கொடிபோன் ஆசனத்தில் ே வேதி தேசத்தவன். விசித்திர -- வண்ணத்தை உடையவன். கேதுவின் படம் ... வாயு திசைக்கு உரியவன். அவனுக்கு எட்டுப் பிள்ளைகள் உண்டு. அவன் புகைகிற மேனி பெற்றவன். வரதமும் கதையும் எந்திய கரங்கள்

1. Hindu Iconography, 2. சித்தாந்த பஞ்சாங்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/66&oldid=1006777" இலிருந்து மீள்விக்கப்பட்டது