பக்கம்:நவக்கிரகம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நவக்கிரகங்கள்

இரண்டை உடையவன். கழுகின்மேல் ஊர்பவன். முடியும் தோள்வளையும் பிற அணிகளும் அணிந்திருப்பவன். அமைதியான தோற்றம் உடையவன். அவனுக்குப் பல வண்ணச் சந்தனமும், பல வண்ண மலரும் விருப்ட் மானவை. அவன் ஆடை, குடை, கொடி யாவும் பல கிறம் உடையவை. கல்ல தேர் உடையவன் அவன். மேருவை அப்பிரதட்சிணமாகச் சுற்றுபவன். -

கேதுவினுடைய அதிதேவதை சித்திரகுப்தன் பிரத்தியதி தேவதை பிரம்மா..!

கேது, கரிய நிறமுடையவனதலின் காலன் என்ற பெயரும் அவனுக்கு வழங்கும். தூம்ரகேது, லோககேது, மஹாகேது, ஸர்வகேது முதலிய பல பெயர்கள் அவனுக்கு உண்டு. ரெளத்ரன் என்ற பெயர் அவனுக்கு இருப்பதனால் அவன் சினமுடையவன் என்று தெரிகிறது.

கேதுவை அலியென்றும் நெடிய உருவம் உடையவனென்றும் சொல்வ துண்டு. அவனுக்குப் பிரியமான ரத்தினம் வைடூரியம். அவனுக்கு உரிய தானியம் கொள். அவனைப் பூசிப்பதற்கு உரிய மலர் செவ்வல்லி அவனுக்கு விருப்பமான சுவை புளிப்பு: சிங்க வாகனமும் அவனுக்கு உண்டென்று கூறுவர். அவனுடைய தேரை ஆறு குதிரைகள் இழுத்துச் செல்வதாக ஒருசாரார் கொள்வர்."

3 படத்தில் கருகிற மேனியணுகிய கேதுவைப் பார்க்கிருேம். அவன் இடமாக வரும் மேரு செங்கிறத்தோடு பின்னே தோற்றம் அளிக் கிறது. கேதுவின் வலப்பக்கத்தில் ஏடும் எழுத்தாணியுமாக உட்கார்க் திருப்பவன் சித்திரகுப்தன். அவனே கேதுவுக்கு அதிதேவதை.

இடப்பக்கத்தில் நான்முகன் வீற்றிருக்கிருன். அவனுடைய மூன்று முகம் முன்னே தெரிய மற்ருெரு முகம் அப்பால் மறைந்திருக்கிறது. அவன்தான் கேதுவின் பிரத்தியதி தேவதை.

கேது, கழுகு வாகனத்தின்மேல் கொடியின் உருவமைந்த ஆசனத்தில் எழுந்தருளியிருக்கிருன். அவன் தலையில் சிவப்பு, நீலம், மஞ்சள் முதலிய பன்னிற மணிகள் பதித்த பெரிய கிரீடம் மின்னுகிறது. அதற்குமேலே குடை, நிழல் தருகிறது. அவனுடைய முகம் செதில்களே உடையதாய்ப் பாம்புமுகம் என்பதைக் குறிப்பிக்கிறது. அவனுடைய விழிகளில் உள்ள சிவப்பு அவன் சினமுடையவன் என்பதற்குச் சாட்சி சொல்கிறது. அவனுடைய வலக்கை அபயமாகவும் இடக்கை கதையை எந்தியதாகவும் இருக்கின்றன. ஆடையில் பல வண்ணங்கள் கலந்திருக்கின்றன.

பொன்னங் கிரிஇடமாப் போதுவான்; மோகினியால் முன்னம் தலையிழந்த மூர்த்தியான்-மன்னுகையில் மோதுகதை அஞ்சல்உள்ளான் மூண்ட க்ருகிறத்தான் கேது என்று சொல்வர் கிளந்து .

18 நவக்கிரக ஆராதனம், ц. 14. 2. அபிதான சிந்தாமணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/67&oldid=584281" இலிருந்து மீள்விக்கப்பட்டது