பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக் காட்டுகின்றது. ஏன் எனின், இப்போது அகப்படும் மற்றை எல்லாப்பாட்டியல்களிற்காட்டிலும், இந்நவநீதப் பாட்டியலில் மிகக் குறைந்த எண்ணுள்ள பிரபந்தங்கள் விளக்கப்பட்டுள்ளன. மிகைச் செய்யுட்களிற் புதியனவாகச் சேர்க்கப்பெற்றுள்ள பிரபந் தங்களை நீக்கினால், 44 பிரபந்தங்களே இதனுள் கூறப்படுவன. வச்சணந்திமாலை இயற்றப்பெற்றது 13-ஆம் நூற்றாண்டாத லின் நவநீதப் பாட்டியல் 14-ஆம் நூற்றாண்டில் இயற்றப் பெற் றது என்று முடிவு செய்யலாம். இவர் செய்ததற்கு இந்நூலின் ஆசிரியராகிய நவநீதரைக் குறித்து யாதும் அறியக் கூடவில்லை. நவநீத நடன் (102 பாடபேதம்) என்று இவர் குறிப் பிடப்படுத்தலினாலே இவர் ஆடலாசிரியராக, அஃதாவது பரத நாட் டியம் பயிற்றும் ஆசிரியராக, இருந்தனர் என்று அறியலாகும். இத் தொழிலை ஸ்வதர்மமாகவுடைய குலத்தைச் சார்ந்தவராக பெரும்பாலும் இருத்தல்கூடும். இவர் பாட்டியலைச் ஓரியையும் புலப்படுகிறது. பரத நாட்டிய சாஸ்திரத்தில் அரங்கில் ஆசன அமைப்பும் அரசன் முன்னிலையில் அவனைக் குறித்து ஆடிப் பாடும் பாட்டுக்களிற் பொருத்தவிலக்கண முதலியனவும் கூறப்பட வேண்டும் அவசியம் எளிதில் அறியத்தக்கதே. என்னிடமுள்ள பரத சாஸ்திர ஏட்டுப் பிரதியொன்றில் இவ்விஷயங்கள் விளக்கப்பட்டுள் ளன. தம் குலத்தொழிலோடு நெருங்கிய தொடர்புடையதாதலின் பாட்டியற்பொருள் குறித்து நவநீதர் நூலியற்றினார் என்று கொள் ளுதல் பொருந்தும். இவ்வாசிரியரது சமயம் வைஷ்ணவம் என்பது 'கார்கொண்ட ' என்ற காப்புச் செய்யுளால் விளங்கும். இவரது நாடு நவந என்பது நூலின் இறுதிச் செய்யுளில் நவநாட்டு நவநீதனே என்று வருதலினால் அறியப்படும். இந்நூலைப் பதிப்பித்தற்கு வேண்டும் ஏட்டுப் பிரதிகளைத் தந்துதவிய சென்னை அரசாங்க நூல் - நிலயத்தாருக்கும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர்க்கும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினர்க் கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். சென்னைப் பல்கலைக் கழகம், 14-4-1943 } எஸ். வையாபுரிப் பிள்ளை தமிழாராய்ச்சித்துறைத் தலைவர்