பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நவநீதப் பாட்டியல் சிற் கொடுவால், அவன் அவளோடு கூறல், அவன் அவளை மன்னித்தல் கேட்க வேண்டல், அவள் மறுத்தல், அவன் சூளுறல், அவள் அவனை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல், விதை முதலிய வளம் கூறல், உழவருழல், காளை வெருளல், அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவன் எழுந்து வித் தல், அதைப் பண்ணைத் தலைவற்கு அறிவித்தல், நாறுநடல், விளைந்தபின் செப் பம் செயல், நெல் அளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகளுள் ஒருவர்க் கொருவர் ஏசல் என இவ்வுறுப்புக்கள் உறப் பாட்டுடைத்தலைவன் பெருமை ஆங்காங்குத் தோன்றச் சிந்தும் விருத்தமும் விரவிவர இவற்றாற் பாடுவது. 15. உழிஞை மாலை: மாற்றாரது ஊர்ப்புறம் சூழ உழிஞைப்பூ மாலை சூடிப் படைவளைப்பதைக் கூறுவது. 16. உற்பவ மாலை: திருமால் பிறப்புப் பத்தினையும் ஆசிரிய விருத் தத்தாற் கூறுவது. 17. ஊசல் : ஆசிரிய விருத்தத்தானாதல், கலித்தாழிசையானாதல் சுற் றத்தோடும் பொலிவதாக ஆடீரூசல், ஆடாமோவூசல் என்று இறக் கூறுவது. 18.ஊர் நேரிசை : பாட்டுடைத் தலைவன் ஊரினைச்சார நேரிசை வெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது. 19. ஊர் வெண்பா: வெண்பாவால் ஊரைச் சிறப்பித்துப் பத்துச் செய்யுள் கூறுவது. 20. ஊரின்னிசை : பாட்டுடைத் தலைவன் ஊரினைச்சார இன் னிசை வெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடு வது. 21. எண் செய்யுள் : பாட்டுடைத் தலைவனது ஊரினையும், பெய ரினையம் பத்து முதல் ஆயிர மளவும் பாடி எண்ணாற் பெயர் பெறுவது. 22. எழுகூற்றிருக்கை: ஏழறையாக்கிக் குறுமக்கள் முன்னின்றும், புக்கும், போந்தும், விளையாடும் பெற்றியால் வழுவாமையால் ஒன்று முதலாக எழிறுதியாக முறையானே பாடுவது. 23. ஐந்திணைச் செய்யுள்: புணர்தல் முதலிய ஐந்து உரிப்பொரு ளும் விளங்கக் குறிஞ்சி முதலிய ஐந்திணையினையுங் கூறுவது. 24. ஒருபா வொருபஃது: அகவலும், வெண்பாவும், கலித்துறை யும் ஆய இவற்றில் ஒன்றால் அந்தாதித் தொடையால் பத்துப்பாடுவது.