பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்த அகராதியும் இலக்கணமும் 64. பல்சந்தமாலை: பப்பத்துச் செய்யுள் ஒவ்வோர் சந்தமாக தூறு செய்யுள் கூறுவது. 65. பவனிக்காதல்: உலாக் காட்சியால் எய்திய காமம் மிக்கால் அவை பிறரோடும் உரைத்து வருந்துவது. 83 66. பன்மணிமாலை: மேற்சொல்லிய கலம்பகத்துள் வரும் ஒரு போகும், அம்மானையும், ஊசலும் இன்றி நுணைபுறுப்புக்கள் எல்லாம் அமைய அவ்வாறு கூறுவது. இதையே கலம்பகமாலை என்ப. 67. பாதாதிகேசம்: கலிவெண்பாவால் அடிமுதல் முடியளவும் கூறு 68. பிள்ளைக் கவி: காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் இவற்றை முறையே அகவல் லிருத்தத்தால் பப்பத்தாகக் கூறுவது ஆண்பாற் பிள்ளைக்கவி. இவ் வறுப்பினுள் கடைமூன்று ஒழித்து, கழங்கு, அம்மனை, ஊசல் என்பவற்றைக் கூட்டி மேற்சொல்லியவாறு கூறுவது பெண்பாற் பிள்ளைக் கவியாம். 69. புகழ்ச்சி மாலை: அகவலடியும் கவியடியும் வந்து மயங்கிய வஞ் சிப்பாவான் மாதர்களினது சீர்மையைக் கூறுவது. 70. புறநிலை: நீ வணங்கும் தெய்வம் நின்னைப் பாதுகாப்ப நின் வழிவழி மிகுவதாக எனக்கூறுவது. 71. புறநிலை வாழ்த்து: அழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு ஒருகாலைக் கொருகால் சிறந்து பொலிவாய் முதலும் ஆசிரியம் இறுதியமாகப் பாடுவது. ன வெண்பா 72. பெயர் நேரிசை; பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சார நேரிசை வெண்பாலரல் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுவது. 73. பெயரின்னிசை: பாட்டுடைத் தலைவன் பெயரினைச்சார இன் னிசை வெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடு 74. பெருங்காப்பியம்: தெய்வவணக்கமும் செயப்படுபொருளும் இவற்றிற்கு இயைய வாழ்த்து முன்னுளதாய், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயக்கும் நெறியுடைத்தாய், நிகரிலாத் தலைவனை யுடைத்தாய், மலையும் கடலும் நாடும் நகரும் பருவமும் இருசுடர்த்தோற்ற மும் என்று இவற்றின் வளம் கூறுற வம், மணமும் முடிகவித்தலும் பொழில்