பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல பாதை 29

குமார்: மோகன்ன மோகன் தான். சரி மோகன், நானும்

உன்னை மாதிரி படிக்கப் போறேன். மோகன் : உனக்கும் ஏதாவது பரிசு கிடைக்கப்

போகுதா? குமார் : ஆமாம். என் அப்பாஎனக்கு பரிசா.குடுப்பாரு! உதைதான் கொடுப்பாரு. பஸ்ட் மார்க் தான் வாங்க முடிலே, லாஸ்ட் மார்க்காவது வாங்காம இருக்கலாம் இல்லியா! என் அப்பா உதைக்கு இந்த ஒமப்பொடி உடம்பு தாங்காது. வர்ரேப்பா.

(குமார் போகிருன். மோகன் சிரிக்கிருன்) அம்மா : (உள்ளிருந்து அழைத்தல்) மோகன் இங்கே - வந்துட்டுப் போயேன். மோகன் : அம்மா! அங்கே வந்தா என்ைேட எழுதுற வே8லகெட்டுப் போயிடும். சூடா ஏதாவது இருந்தா: இங்கே கொண்டு வாம்மா. அம்மா : (வந்துகொண்டே) சூடா நெருப்புத்தான்

இருக்கு. கொண்டு வரட்டுமா? மோகன் : அம்மா கொடுத்தா, அதையும் அமிர்தம்னு

சாப்பிட்டுடுவேன். - - அம்மா : இப்ப காபி தர்றேன்.அப்புறமா நெருப்பு தர்ரேன். (இருவரும் சிரிக்கின்றனர்). மோகன் இது புது பேன மாதிரியா இருக்கே? அப்ப வாங்கித் தந்தரா? - மோகன் : இல்லேம்மா. அம்மா : எப்படி கிடைச்சது உனக்கு? மோகன் : பள்ளிக்கூடத்து மைதானத்திலே கிடந்:

தும்மா. எடுத்துகிட்டு வந்துட்டேன்.