பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

வகையிலே தான் அமைந்திருக்கின்றன. பத்தாண்டு காலம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன் பழகவும், படிப்பித்துத் தரவும், அவர்களுக்கு நாடகம் எழுதி நடிப்பினைக் கற்றுத்தரவும், கூடிய வாய்ப்பினை நான் பெற்றிருந்ததால்தான், இத்தகைய ஓர் இனிய முயற்சியில் என்னல் ஈடுபட முடிந்தது.

முதல் வகுப்பிலிருந்து முதுகலை வகுப்பு வரையிலும் (I. K.G. to M.A.), மற்றும் தொழிலாளர்களுக்கும் நாடகக் கலையில் விருப்பத்துடன் நடிக்க வந்தவர்களுக்கும் நாடகங்கள் எழுதி, இயக்கி, தயாரித்து மேடையேற்றிய என் அனுபவங்களே இந்நூலை நல்ல முறையில் எழுதிடத் துணை புரிந்துள்ளன.

ஏற்கனவே, நல்ல நாடகங்கள் என்னும் எனது நூல் வெளியாகி, பரபரப்புடன் விற்பனையாகியதைக் கண்டு, தொடர்ந்து நான் எழுதிய நாடகங்களே இப்பொழுது நூல் வடிவம் பெறுகின்றன. -

விளையாட்டுத் துறையில் நான் நூல்கள் எழுதிக்கொண்டு இருந்த பொழுதும்கூட, நாடகத்துறையில் இருந்த என் ஆர்வத்தைக் கண்டு, எனது இனிய அன்புக்குரிய நண்பர் திரு வெ. நல்லதம்பி M.A. அவர்கள், வானெலியில் சிறுவர் நிகழ்ச்சிக்கும், தொலைக் காட்சியில் கண்மணிப் பூங்கா நிகழ்ச்சிக்கும் நாடகங்கள் எழுதிடத் தூண்டி, உற்சாசத்துடன் வாய்ப்பளித்திராவிட்டால், இந்நூல் இன்று வெளிவந்திருக்க

• lزئITللا-وا Up)

இத்தகைய அரிய பணியை நிறைவேற்றுமாறு எனக்குப் பல்லாற்ருனும் உதவி புரிந்த நண்பர் நல்லதம்பி அவர்களுக்கு, என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வர்ய்ப்பினை நல்கிய சென்னை வானெலி நிலைய இயக்குங்ர் அவர்களுக்கும், சென்னை தொலைக் காட்சி கிலேய இயக்குநர் அவர்களுக்கும் என் இதயங்கலங்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடக நூல்கள் நிறைய வெளி வரவேண்டும் என்ற ஆர்வத்தில் சாந்தி மலர் பதிப்பகத்தார், இந்நூலை வெளியிடு