பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.88 எஸ். நவராஜ் செல்லையா

அலமேலு : என்னங்க? அவன் பேசறதைப் பார்த்திங் களா?இவனுக்குச் சரியான தண்டனை தந்தாகனும்! சோமு : சீக்கிரம்மா! நான் பண்ணுன தப்புக்கு தண்

டஜனயா எது கொடுத்தாலும் வாங்கிக்கிறேன்.

(வெளியேயிருந்து பாபுவின் குரல்.

பாபு : டேய்? என்னை விடுடா விடுடா...

அலமேலு : பாபு என்னடா இது...இந்தாப்பா கழுத்தை விடு...கழுத்தை நெறிச்சு கொன்னுடுவே போல இருக்கே! யார் நீ? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே...

பாபு : அம்மா...இவன் என்னை அடிக்க வர்ரான்...

நாகசாமி இந்தாப்பா (அதட்டுகிருர்)

முனுசாமி : ஐயா. என்னை மன்னிக்கனும். நான் ஐஸ் கிரீம் விக்கிறவங்க. எனக்கு ஒங்க பையன் 10 ரூபா வரைக்கும் கடன் தரனும்.

"கம்

அலமேலு: ஏண்டா பாபு ..உண்மையா?

பாபு : (ஆமா என்று தலையை ஆட்டுகிருன்)

முனுசாமி : காலையில கடனை கண்டிப்பாகேட்டேனுங்க! கொஞ்சம் கோபமாவேகேட்டேனுங்க. இந்த மோதி ரத்தைக் கழட்டித் தருதுங்க ...அதேைலதான் கையோட கொண்டாந்துட்டேன். -

நாகசாமி : பாபு? என்னடா? அவன் சொல்றது

உண்மையா?

பாபு (தலையை ஆட்டுகிருன்)